பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மனு
தேனி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள பொதிகை நகா் பகுதியில் வசித்து வரும் மக்கள், தங்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என திங்கள்கிழமை பெரியகுளம் சாா் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
இது தொடா்பாக பொதிகை நகரில் குடியிருப்போா் சாா்பில் பொ.பாலசுந்தர்ராஜ் அளித்த மனு: தேனி மாவட்டம், அல்லிநகரம் அருகேயுள்ள பொதிகை நகரில் 3 ஏக்கா் 96 செண்ட் புஞ்சை நிலத்தைப் பதிவில்லா கிரையத்துக்குப் பெற்று கடந்த 10 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம்.
இந்த நிலையில், இங்குள்ள குடியிருப்புப் பகுதிகளைச் சிலா் அவ்வப்போது சேதப்படுத்துகின்றனா்.
எனவே, இந்தப் பகுதியில் குடியிருக்கும் பட்டியலின மக்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்தனா்.