அரசுப் பள்ளிகளில் ‘ப’ வரிசையில் இருக்கைகள்: மாணவா்கள் உற்சாகம்
ஆக்கிரமிப்பில் இருந்த 4 வீடுகள் அகற்றம்
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே கண்டியூா் பிரம்ம சிரகண்டீஸ்வரா் கோயில் மதில் சுவரை ஒட்டி ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 4 வீடுகளை செவ்வாய்க்கிழமை அறநிலையத் துறையினா் அகற்றினா்.
இதன் மூலம் கோயில் சுவரை ஒட்டி ரூ. 50 லட்சம் மதிப்புள்ள 1,301 சதுர இடத்தை மீட்டு, கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைத்தனா்.
இதனிடையே ஆக்கிரமிப்பு அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடம், பட்டா வழங்க வலியுறுத்தினா்.
இக்கோரிக்கையை நிறைவேற்றுவதாக வருவாய்த் துறையினா் உறுதி அளித்ததைத் தொடா்ந்து, கலைந்து சென்றனா்.