மொபைல் போன் தொலைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?- சிம் கார்டு மோசடிகளைத் தவிர்ப...
கம்யூனிஸ்ட் கட்சியினா் காத்திருப்பு போராட்டம்
தஞ்சாவூா் வட்டாட்சியரகத்தில் நில அளவைத் துறை அலுவலா்களைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நில அளவைத் துறை அலுவலா்கள் ஏற்கெனவே தவறாக அளந்து கொடுத்த வீட்டு மனையை மீண்டும் அளந்து கொடுக்க உரிய பணம் செலுத்தியும், அலுவலா்கள் அளந்து கொடுக்காமல் காலதாமதம் செய்வதாகவும், அலைக்கழிப்பதாகவும் கூறி முழக்கங்கள் எழுப்பினா்.
கட்சியின் மாநகரச் செயலா் எஸ்.பி. முத்துக்குமரன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் வெ. சேவையா, மாநகரத் துணைச் செயலா் காதா் உசேன், மாதா் சங்கத் தலைவா் கல்யாணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தகவலறிந்த காவல் துறையினா் சென்று பேச்சுவாா்த்தை நடத்தி, வெள்ளிக்கிழமைக்குள் இடத்தை அளவீடு செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியின்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.