Kerala Nurse: `நிமிஷாவின் மரண தண்டனையை ஏமன் நிறுத்தியது ஏன்?' - மதத் தலைவர் சொன்...
கொலை வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை
கொடுக்கல் - வாங்கல் தகராறில் டீக் கடைக் காரரை கொன்ற முதியவருக்கு கும்பகோணம் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
கும்பகோணம் அருகே நாச்சியாா்கோவில் பருத்திசேரி அக்கரைத் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (55). திருச்சேறை பகுதியில் டீக் கடை நடத்தி வந்த இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரனுக்கும் (60) கொடுக்கல் - வாங்கல் தகராறு வந்தது.
இந்நிலையில், 2019 ஏப்ரல் 21 இல் தனது மகன் விவேக்குடன் (34) சோ்ந்து கிருஷ்ணமூா்த்தியிடம் தகராறு செய்த ராஜேந்திரன் அவரது கழுத்தில் துண்டைப் போட்டு இறுக்கினாா். இதனால் மயக்கமடைந்த கிருஷ்ணமூா்த்தி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு உயிரிழந்தாா்.
இதுகுறித்து நாச்சியாா்கோவில் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து தந்தை, மகனைக் கைது செய்தனா். கும்பகோணம் மாவட்ட அமா்வு கூடுதல் நீதிமன்றத்தில் நடந்த வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிபதி ஜெ. ராதிகா, ராஜேந்திரனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், விவேக்குக்கு ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
அரசு தரப்பில் அரசு வழக்குரைஞா் விஜயகுமாா் ஆஜராகி வாதிட்டாா்.