காலாவதி சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க விதியை திருத்திய மத்திய அரசு: பேரவைய...
இந்தியாவிலேயே மிகவும் பிடித்தது சேப்பாக்கம் திடல்தான்: தோனி
ஐபிஎல்லின் 18ஆவது சீசன் கடந்த மார்ச்.22இல் தொடங்கியது. இதில் 5 முறை கோப்பை வென்ற சிஎஸ்கே அணி தனது முதல் போட்டியில் மும்பையை வென்றது.
சிஎஸ்கே தனது 2ஆவது போட்டியில் ஆர்சிபியுடன் இன்று (மார்ச்.28) சேப்பாக் திடலில் மோதுகிறது.
17 ஆண்டுகளாக சேப்பாக்கில் சிஎஸ்கே அணி ஆர்சிபிக்கு எதிராக தோற்றதே இல்லை. இந்த ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என ஆர்சிபி ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
இந்தியாவின் எந்த திடலுக்குச் சென்றாலும் தோனிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். இந்நிலையில் தனக்கு பிடித்தமான திடல் குறித்து ஜியோ ஹாட்ஸ்டாருக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தோனி பேசியதாவது:
ஐபிஎல் எனக்கு வாய்ப்பு
இது ரசிகர்களிடமிருந்து வரும் ஒரு மிகப்பெரிய நன்றி என நான் எப்போதும் கூறுவேன். நான் அதைத்தான் நம்புகிறேன். கடந்த சில ஆண்டுகளாக நான் விளையாடும்போது ரசிகர்கள் “நீங்கள் என்ன செய்தாலும் அதற்கு நன்றி’ எனக் கூறுகிறார்கள். இது அற்புதமான ஒன்று.
குறிப்பாக விளையாட்டில் நீங்கள் எதிர்பார்ப்பது ரசிகர்களின் பாராட்டைதான். அதுவும் கிரிக்கெட் என வந்துவிட்டால் இந்தியாதான் விளையாடுவதற்கு சிறப்பான இடம். இந்திய கிரிக்கெட் அணியில் இருப்பது மிகப்பெரிய விஷயம்.
நான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை விளையாடவில்லை. அதனால், எனக்கு ஐபிஎல்தான் மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கிறது.
சேப்பாகம் பிடிக்க காரணம் இதுதான்
திடலில் எப்போது நடந்துசென்றாலும் ரசிகர்களின் ஆதரவு கிடைக்கிறது. எனக்காக காத்திருக்கிறார்கள். சில நேரங்களில் அவர்கள் அணிக்கு எதிராக நான் விளையாடும்போது அவர்கள் வெற்றிபெற நினைத்தாலும் நான் நன்றாக விளையாட வேண்டுமென நினைக்கிறார்கள். இது அற்புதமான உணர்வு.
சென்னையை தவிர 2ஆவது மைதானத்தை தேர்வு செய்வது கடினம். ஏனெனில் நான் எங்கு சென்றாலும் எனக்கு ஒரே மாதிரியான வரவேற்பு கிடைக்கிறது. 2007 டி20 உலகக் கோப்பை வென்றதால் மும்பையில் எனக்கு நல்ல ஆதரவு இருக்கிறது. 2011 உலகக் கோப்பையும் அங்குதான் நடைபெற்றது. அதனால் அந்த இடம் எனக்கு கூடுதல் சிறப்பானதாக இருக்கிறது.
அதைத் தவிர்த்து நான் பெங்களூரில் விளையாடினாலும் எனக்கு ஆதரவு கிடைக்கும். அவர்கள் மிகவும் சப்தம் எழுப்புவர்களாக இருப்பார்கள். கொல்கத்தாவில் மிகப்பெரிய திடல். தற்போது அஹமதாபாத்திலும் அதேதான். அதனால் தற்போது எந்த இடத்தை தேர்வு செய்வதென்பது குழப்பம். ஆனால், சேப்பாக்கம் எல்லாவற்றையும் விட ஸ்பெஷலானது. ஏனெனில் அங்கு விசில், மிகவும் சப்தம் எழுப்புவர்களாக இருக்கிறார்கள் என்றார்.