செய்திகள் :

இந்தியாவில் எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு இல்லை: பொது சுகாதார இயக்குநரகம்!

post image

இந்தியாவில் எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு பதிவாகவில்லை, சாதாரண சுவாச பிரச்னையை ஏற்படுத்தும் எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு இந்தியாவில் இல்லை என்றும் வைரஸ் பாதிப்பு குறித்து அச்சப்பட வேண்டாம் என்றும் பொது சுகாதார இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

சீனாவில் கடந்த சில நாள்களாக கடுமையான காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் ஏராளமான மக்கள் குவிந்து வரும் நிலையில், இதற்கு எச்எம்பிவி அல்லது மெடாநியுமோ வைரஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

நுரையீரல் தொற்று பாதிப்புடன் மருத்துவமனைகளில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வருவதாகவும் சீனாவின் பல மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்து வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எச்எம்பிவி எனப்படும் ஹியூமன் மெடாநியூமோவைரஸ் பாதிப்பே இந்த நிலைக்குக் காரணம் என்று தெரிய வந்துள்ளது.ஆனால், இதுவரை அவசரநிலையாக சீன சுகாதாரத் துறையாலோ அல்லது உலக சுகாதார அமைப்பாலோ அறிவிக்கப்படவில்லை.

இதுபற்றி பொது சுகாதார இயக்குநர் ஜெனரல் அதுல் கோயல் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சீனாவில் எச்எம்பிவி வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது என்று செய்திகள் வந்துள்ளன. நாங்கள் அப்படி நினைக்கவில்லை.

நான் தெளிவாகச் சொல்கிறேன். இது சுவாச வைரஸ் போன்றது. இந்த வைரஸ் காய்ச்சல் போன்ற அறிகுறிகளை பெரும்பாலும் பெரியவர்களுக்கும் 1 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கும் ஏற்படுத்துகிறது.

குளிர்காலத்தில் சுவாசக் கோளாறுகள் பொதுவானவை. அவற்றைச் சமாளிக்க இந்தியாவில் உள்ள மருத்துவமனைகள் தயாராக இருக்கின்றன. மருந்துகள் தேவையில்லை, ஏனெனில் இதற்கு எதிராக வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் எதுவும் இல்லை.

மருத்துவமனைகளிலோ அல்லது இந்திய மருத்துவ ஆய்வு மையத்தின் தரவுகளின்படியோ பெரிய நோய்ப் பாதிப்புகள் எதுவும் இல்லை. இதைப் பற்றி பயப்பட ஒன்றுமில்லை. குளிர் காற்று மற்றும் காற்றின் மோசமான தரக் குறியீட்டின் காரணமாக, குளிர்காலக் காலங்களில் சுவாச நோய்கள் குறித்த கவலைகள் பொதுவாகவே ஏற்படுகின்றன” என்றார்.

சில சுவாச நோய்கள் குளிர்காலத்தில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், நிமோனியாவைக் கண்காணிக்கும் அமைப்பை அமைப்பதாக சீன நோய் கட்டுப்பாட்டு ஆணையம் டிசம்பரில் அறிவித்தது.

இந்த அமைப்பில் சீனாவின் நடவடிக்கையாக 5 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய கரோனா தோற்று பாதுகாப்பு நடவடிக்கைகளைவிட சிறப்பாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

விடுதி வளாகத்தில் மருத்துவ மாணவி வன்கொடுமை! இது மத்தியப் பிரதேசத்தில்...

மத்தியப் பிரதேசத்தில் மருத்துவ மாணவி ஒருவர் கல்லூரி விடுதியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் அரசு மருத்துவக் கல்லூரி விட... மேலும் பார்க்க

பாஜக கூட்டணியில் இணைய சரத் பவார் பேச்சு? சுப்ரியா சுலேவுக்கு மத்திய அமைச்சர் பதவி?

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) தலைவர் சரத் பவார் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மகராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமை... மேலும் பார்க்க

அஸ்ஸாம் நிலக்கரி சுரங்க விபத்து: 3 உடல்கள் கண்டெடுப்பு!

அஸ்ஸாமில் நிலக்கரி சுரங்க விபத்தில் 9 தொழிலாளர்கள் சிக்கியதாகக் கூறப்படும் நிலையில் 3 பேரின் உடல்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளன. அஸ்ஸாம் மாநிலத்தின் திமா ஹசாவ் மாவட்டத்தில் உம்ரங்சோ பகுதியில் உள்ள ந... மேலும் பார்க்க

25 ஆண்டுகளாக பூட்டப்பட்டிருந்த வீட்டில் மண்டை ஓடு, எலும்புகள்!

கேரளத்தில் 25 ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டிருந்த வீட்டில் மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.கொச்சி மாவட்டம், சோட்டானிக்கரை அருகேவுள்ள எருவேலி பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக பராமரி... மேலும் பார்க்க

அஸ்ஸாம்: நிலக்கரி சுரங்கத்தில் விபத்து! தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்

குவஹாட்டி : வட கிழக்கு மாநிலமான அஸ்ஸாமின் திமா ஹசா மாவட்டத்தின் தின்கிலோ பகுதியில் அமைந்துள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்டுள்ள விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், சுரங்கத்தினுள் 9 தொழிலாளர... மேலும் பார்க்க

குஜராத்: ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இளம் பெண்ணை மீட்கும் பணி தீவிரம்!

காந்தி நகர்: குஜராத்தின் கச் மாவட்டத்திலுள்ள கந்தேராய் கிராமத்தில் சரியாக மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றுக்குள் 18 வயது இளம்பெண் ஒருவர் விழுந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. த... மேலும் பார்க்க