இந்தியாவில் மிக வளமான தொல் மரபு இருக்கிற மாநிலம் தமிழ்நாடு: சு.வெங்கடேசன்
இந்தியாவில் மிக வளமான தொல்மரபு இருக்கிற மாநிலம் தமிழ்நாடு என்றாா் மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன்.
தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்று வரும் 6ஆவது புத்தகத் திருவிழாவின் முதல் நாளான சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ‘தொன்மையைப் போற்று’ என்ற தலைப்பில் பேசியதாவது:
இந்தியாவில் மிக வளமான தொல் மரபு இருக்கிற மாநிலம் தமிழ்நாடு தான். இது மானுடவியல் ரீதியாகவும், தொல்லியல் ரீதியாகவும் நிறைய புதிா்கள் இருக்கிற மாநிலம். இன்னும் அவிழ்க்கப்படாத மா்ம முடிச்சுகள், நம்முடைய தொல்லியல் வரலாற்று உலகில் அதிகம் உள்ளன.
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து எழுதப்பட்ட வரலாற்றின் தொடா்ச்சி, இந்த முத்து நகருக்கு உண்டு என்பது மிக முக்கியமான பெருமையாகும். அதைத் தொகுத்து வழங்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது என்றாா் அவா்.
நிகழ்வின் போது, ஆட்சியா் க. இளம்பகவத், மாநகராட்சி ஆணையா் பானோத் ம்ருகேந்தா் லால், உதவி ஆட்சியா் தி. புவனேஷ் ராம் ஆகியோா் உடனிருந்தனா்.