செய்திகள் :

இந்தியாவில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் முடக்கம்! ஏன்?

post image

இந்தியாவில் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் பக்கம் முடக்கப்பட்டது விரைவில் சரி செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, ராய்ட்டர்ஸ் நிறுவனம் எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.

மத்திய அரசின் பரிந்துரையின்பேரில்தான், ராய்ட்டர்ஸ் எக்ஸ் பக்கம் முடக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இருப்பினும், அதனை மறுத்த மத்திய அரசின் செய்தித் தொடர்பாளர், ``ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, ராய்ட்டர்ஸ் உள்பட பல்வேறு எக்ஸ் கணக்குகளை முடக்குமாறு எக்ஸ் செயலி நிறுவனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இருப்பினும், அப்போது ராய்ட்டர்ஸ் எக்ஸ் பக்கம் முடக்கப்படவில்லை. அப்போதைய கோரிக்கையின் காரணமாக, இப்போது முடக்கப்பட்டிருக்கலாம்.

எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, அதனை சரிசெய்வதற்கான பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்று கூறினார்.

Reuters X account blocked in India

பிரிக்ஸ் மாநாடு: பிரதமரை வரவேற்ற குட்டி இதயங்கள்...

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் பிரேசில் சென்றுள்ளார்ரியோ டி ஜெனீரோ நகரில் பிரதமரை வரவேற்க திரண்டிருந்த இந்திய வம்சாவளியினர் பிரேசிலுக்குச் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு...... மேலும் பார்க்க

உலக வளர்ச்சிக்கு தெற்குலகின் குரல் ஏன் முக்கியம்? பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் பேச்சு

பிரேசிலில் நடைபெற்றுவரும் பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, அமைதி, பாதுகாப்பு மற்றும் உலகளாவிய சீர்திருத்தம் குறித்து இன்று (ஜூலை 6) உரையாற்றினார். அரசு முறைப் பயணமா... மேலும் பார்க்க

ஊழியர்கள் 9.15 மணி நேரம் பணிபுரிய வேண்டும்: இன்ஃபோசிஸ் எச்சரிக்கை!

நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரும் நாள்தோறும் 9.15 மணி நேரம் பணிபுரிய வேண்டும் என இன்ஃபோசிஸ் எச்சரித்துள்ளது. வாரத்திற்கு 70 மணிநேரம் பணிபுரிய வேண்டும் என இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி சமீபத்தில் த... மேலும் பார்க்க

மொஹரம் ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி; 3 பேர் காயம்

ஜார்க்கண்ட்டில் மொஹரம் ஊர்வலத்தின்போது மின்சாரம் தாக்கியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலம் கோத்தம்பா காவ... மேலும் பார்க்க

ஹிந்தி பேசலாம்; படிக்க கட்டாயப்படுத்தக் கூடாது!

ஹிந்தி மொழியினை பேசலாம்; ஆனால், ஆரம்பப் பள்ளியில் ஹிந்தி மொழியைப் படிக்க கட்டாயப்படுத்தக் கூடாது என சிவசேனை கட்சியின் எம்.பி. சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார். தென்மாநிலங்கள் ஹிந்தி திணிப்பை தீவிரமாக எதி... மேலும் பார்க்க

பிகாரில் 3 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்! உச்ச நீதிமன்றத்தில் முறையீடு!

புது தில்லி: பிகாரில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டள்ளதொரு பொதுநல மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.பிகாரில் வரும... மேலும் பார்க்க