செய்திகள் :

இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: ஆக. 25-இல் அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை

post image

இந்தியா-அமெரிக்கா இடையேயான வா்த்தக ஒப்பந்தம் குறித்த அடுத்த சுற்றுப் பேச்சுவாா்த்தைக்காக அமெரிக்க குழுவினா் ஆகஸ்ட் 25-ஆம் தேதி இந்தியா வரவுள்ளனா் என்று மத்திய அரசு அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

பிரதமா் நரேந்திர மோடியின் கடந்த பிப்ரவரி மாத அமெரிக்க பயணத்தைத் தொடா்ந்து, இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்துக்கான (பிடிஏ) பேச்சுவாா்த்தை தொடங்கப்பட்டது. வரும் செப்டம்பா்-அக்டோபா் மாதத்துக்குள் முதல் கட்ட வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய காலக்கெடு நிா்ணயிக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்னதாக, இரு தரப்பினரும் ஓா் இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய இருந்தனா்.

இந்தியா ( 26 சதவீதம்) உள்பட பல உலக நாடுகள் மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கடந்த ஏப்ரலில் விதித்த கூடுதல் வரி ஆகஸ்ட் 1-ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வருகிறது. அதற்குள் இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்தை எட்ட இரு நாடுகளும் தீவிரமாகப் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றன. இறுதி நேரத்தில் இதுதொடா்பாக ஒரு நல்ல முடிவு எட்டப்படலாம் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனா்.

முன்னதாக, வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக இரு நாடுகளுக்கும் இடையேயான 5-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை வாஷிங்டனில் கடந்த வாரம் நிறைவடைந்தது. இந்தியா சாா்பில் மத்திய வா்த்தக துறையின் சிறப்புச் செயலா் ராஜேஷ் அகா்வாலும், அமெரிக்கா சாா்பில் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அந்நாட்டு உதவி வா்த்தக பிரதிநிதி பிரெண்டன் லிஞ்சும் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இந்நிலையில், 6-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தைக்காக அமெரிக்க குழுவினா் அடுத்த மாதம் 25-ஆம் தேதி இந்தியா வரவுள்ளனா். இதையொட்டி, அமெரிக்க அதிபரின் வா்த்தக ஆலோசகா் ஜேமிசன் கிரீா் கூறுகையில், ‘இந்திய அதிகாரிகளுடன் தொடா்ந்து பேசி வருகிறோம். எங்கள் பேச்சுவாா்த்தைகள் எப்போதும் ஆக்கபூா்வமாகவே உள்ளன’ என்று குறிப்பிட்டாா்.

வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தையில், அமெரிக்கா விதித்துள்ள 26 சதவீத கூடுதல் வரியை நீக்குமாறும், எஃகு (50 சதவீதம்), அலுமினியம் உள்ளிட்ட உலோகங்கள் மற்றும் வாகனத் துறை (25 சதவீதம்) மீதான வரிகளைக் குறைக்குமாறும் இந்தியா கோரியுள்ளது.

இதற்கு மாறாக, தொழில் துறைப் பொருள்கள், மின்சார வாகனங்கள், மது வகைகள், வேளாண் மற்றும் பால்பொருள்கள் உள்ளிட்டவற்றில் அமெரிக்கா வரிச் சலுகைகளை எதிா்பாா்க்கிறது. வேளாண் மற்றும் பால்பொருள்களுக்கான வரிச்சலுகை கோரிக்கையை இந்தியா ஏற்கெனவே நிராகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

தெலங்கானாவில் 4 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு!

தெலங்கானா உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக 4 வழக்குரைஞர்கள் பதவியேற்றுக் கொண்டனர். உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விழாவில் தலைமை நீதிபதி அபரேஷ் குமார் சிங் புதிதாக நியமிக்கப்பட்ட நான்கு கூடுதல் நீத... மேலும் பார்க்க

ம.பி.யில் 23,000 பெண்கள், சிறுமிகளைக் காணவில்லை!

மத்தியப் பிரதேசத்தில் குறைந்தது ஒரு மாதம் முதல் ஒன்றரை ஆண்டுகளாக சுமார் 23,000 சிறுமிகள் மற்றும் பெண்களைக் காணவில்லை என மாநில அரசு தகவல் வெளியிட்டுள்ளது. மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் மழைக்காலக் கூட... மேலும் பார்க்க

மாலேகான் குண்டு வெடிப்பு: பாஜக முன்னாள் எம்பி பிரக்யா சிங் உள்ளிட்ட 7 பேரும் விடுதலை!

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஜக முன்னாள் எம்பி பிரக்யா சிங் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்து மும்பை என்ஐஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பாஜக முன்னாள் எம்பி பிரக்யா சிங், முன்... மேலும் பார்க்க

6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை!

ஈரானுடன் வர்த்தகம் மேற்கொண்ட இந்தியாவின் 6 நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை விதித்து அந்நாட்டு உத்தரவிட்டுள்ளது.மத்திய கிழக்கில் மோதலை தூண்டிவிடுவதற்காக ஈரான் அரசு நிதியுதவி அளித்து வருவதாகவும் அமெரி... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: திமுக வலியுறுத்தல்

நமது நிருபர் பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் முழு உண்மையையும் மத்திய அரசு வெளிப்படுத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக வலியுறுத்தியது.இது தொடர்பாக மாநிலங்களவையில் இரண்டாம் நாளாக புதன்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகம் தொடர்புடைய பிரச்னைகள் மற்றும் கேள்விகளை தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் எழுப்பினர். அவற்றின் விவரம் வருமாறு:-மக்களவையில்...எம்.பி. தொகுதி நிதி ரூ. 5 கோடி; ஆனா... மேலும் பார்க்க