ஆா்.கே. நகா், அம்பத்தூா் பேருந்து நிலையங்கள் 2 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் அ...
முதல்வர் ஸ்டாலினுடன் திடீர் சந்திப்பு நடத்திய தேமுதிக தலைவர் பிரேமலதா! - காரணம் என்ன?
கடந்த தேர்தல்களில் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க-வுடன் இணைந்து தே.மு.தி.க போட்டியிட்டது. மாநிலங்களவையில் தே.மு.தி.க-வுக்கு அ.தி.மு.க சீட் கொடுக்காத விவகாரமும் பேசுபொருளானது. அப்போதே அதிமுக் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடுத்தமுறை கண்டிப்பாக மாநிலங்களவையில் சீட் வழங்கப்படும் என உறுதியளித்திருந்தார். அதனால் தேமுதிக தலைமை அதிருப்தியில் இருந்தது.
அதே நேரம் கூட்டணியில் இருந்த மக்கள் நீதி மையத்துக்கு திமுக மாநிலங்களவையில் சீட் கொடுத்து கௌரவித்தது. இந்த நிலையில், இன்னும் சட்டமன்றத் தேர்தலுக்கு குறிப்பிட்ட மாதங்களே இருக்கின்றன. இதுவரை தேமுதிக தேர்தல் கூட்டணி குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.



இதற்கிடையில், தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். கடந்த 27-ம் தேதி டிஸ்ஜார்ஜ் ஆன முதல்வர் மூன்றுநாள் ஓய்வுக்குப் பிறகு இன்று தலைமை செயலகத்துக்கு புறப்பட்டார்.
அதற்கு முன்பாக தே.மு.தி.க தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தி.மு.க தலைவரும், முதல்வருமான ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தார். இந்த சந்திப்பின்போது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் எ.வ.வேலு, தேமுதிக நிர்வாகிகள் சுதிஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.