``நாலைஞ்சு தலைமுறையா பாதையோர வாசிதான்'' - கானா பாடகர் மெட்ராஸ் மிரன்
திருப்பூர் பள்ளியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை! வடமாநில இளைஞர் கைது!!
திருப்பூரில் தனியார் பள்ளியில் 1 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஜெய் என்பவர், துப்புரவுப் பணியாளராக வேலை செய்து வந்துள்ளார். இவர் அங்கு 1 ஆம் வகுப்பு பயிலும் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து பெற்றோர் புகார் அளிக்கவே வடமாநில இளைஞர் ஜெய் காவல்துறையினரால் நேற்று(புதன்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.
குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதை வலியுறுத்தி பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.