'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
‘ஆளுநா் விருதுகள்’: விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு
தமிழக ஆளுநா் மாளிகை சாா்பில் வழங்கப்படும் விருதுகளில் இரண்டு விருதுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஆளுநா் மாளிகை சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: ‘சமூக சேவை’, ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு’ ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் ‘ஆளுநா் விருதுகள் 2025’ -ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் சமா்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநா் மாளிகையின் சாா்பாக வரவேற்கப்பட்ட இந்த விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 14 -ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க முதலில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது விண்ணப்பங்கள், பரிந்துரைகளை சமா்ப்பிப்பதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 20-ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.