செய்திகள் :

இந்தியா கூட்டணித் தலைவர்கள் ஒன்றாக அமர்ந்து பேசி பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும்! - கபில் சிபல்

post image

இந்தியா கூட்டணிக் கட்சியினர் ஒன்றாக அமர்ந்து பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞரும் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல் கூறியுள்ளார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கபில் சிபல் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சி, மற்ற கட்சிகளுடன் இணைந்து வேலை செய்யத் தயாராக இருக்கிறது. மற்ற கட்சிகளின் ஒத்துழைப்புடன் முன்னேறவும் முயற்சிக்கிறது. சில நேரங்களில் சிக்கல்கள் இருப்பது உண்மைதான்.

பிகாரில் கடந்த 2020 தேர்தல் கூட்டணியில் காங்கிரஸுக்கு சில தொகுதிகள் வழங்கப்பட்டன. ஆனால் வெற்றி பெற முடியவில்லை. காங்கிரஸ் கூட்டணி காரணமாகவே ஆட்சிக்கு வர முடியவில்லை என்று ஆர்ஜேடி கூறியது.

இதையும் படிக்க | ஒரேநாளில் ரூ. 237.98 கோடி வருவாய்! - பத்திரப் பதிவுத் துறை தகவல்

ஆனால் பாஜகவை தோற்கடிக்க, அனைத்து மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து இந்தியா கூட்டணிக் கட்சியினர் பேசி முடிவு செய்ய வேண்டும்.

சமீபத்தில் தில்லி, மகாராஷ்டிரம், ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. ஒரே ஆளுமையின் கீழ் அந்த கட்சி செய்லபடுவதால் வெற்றி எளிதாகிறது.

உத்தரப் பிரதேசம், தமிழ்நாட்டில் கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்டது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கும் பலன் கிடைத்தது.

எனவே, மாநில சட்டப்பேரவைத் தேர்தலின்போது இந்தியா கூட்டணிக் கட்சியினர் பேசி சுமூக முடிவு எடுக்க வேண்டும்.

சரத் பவார், 'இந்தியா கூட்டணி ஒரு தேசிய கூட்டணி, மாநிலக் கூட்டணி அல்ல, நாடாளுமன்றத் தேர்தல்களுக்கு மட்டுமே இது பொருந்தும், மாநிலத் தேர்தல்களுக்கு பொருந்தாது' என்று கூறியிருந்தார்.

இதையும் படிக்க | தவெக நிர்வாகிகளுடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை!

ஆனால், மாநிலக் கட்சிகள், தங்களது மாநிலம் கடந்து கால்பதிக்க வேண்டும், அதேபோல தேசிய கட்சிகள், தாங்கள் கால் பதித்த இடங்கள் குறையக்கூடாது, அதிகரிக்க வேண்டும். இதற்கு இந்தியா கூட்டணிக் கட்சிகளிடையே ஒற்றுமை வேண்டும்.

தில்லி பேரவைத் தேர்தலில் படுதோல்வியை காங்கிரஸ் சந்தித்தது. பாஜக 27 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ்- ஆம் ஆத்மி இணைந்து போட்டியிருந்தால் தில்லியில் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கலாம் என்று இந்தியா கூட்டணி தலைவர்கள் கூறி வருகின்றனர்.

முன்னதாக, ஹரியாணா, மகாராஷ்டிரத்தில் பாஜக அமோக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தனியார் கிடங்கிலிருந்து 400 குவிண்டால் ரேஷன் அரிசி பறிமுதல்!

இந்தூர்: இந்தூர் நிர்வாகமானது தனியார் கிடங்கிலிருந்து சுமார் 400 குவிண்டால் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.இந்தூர்-உஜ்ஜைன் சாலையில் உள்ள கிடங்கில் சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்பட்டு, குஜராத்துக்கு அன... மேலும் பார்க்க

கும்பமேளா: ரயிலில் இடம் கிடைக்காததால் ஏசி பெட்டிகளில் ஜன்னல்களை உடைத்து நுழைந்த பயணிகள்!

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் திரண்டுள்ளது. அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிவிட்டு தங்கள் சொந்த ... மேலும் பார்க்க

தெலங்கானா: இன்றுமுதல் பீரின் விலையில் 15% உயர்வு!

தெலங்கானாவில் பீரின் விலையில் 15 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.தெலங்கானாவில் பீர் விலையை அதிகரிக்குமாறு கோரிய யுனைடெட் ப்ரூவெரிஸின் கோரிக்கையால் பீர் விலையில் 15 சதவிகிதம்வரையில் அதிகரித்து தெலங்கானா ... மேலும் பார்க்க

4 மனைவிகளுடன் குடும்பம் நடத்திய கல்யாணராமன் கைது!

இன்றைய இளைஞர்கள் பலர் திருமணம் செய்ய பெண் கிடைக்காமல் தவிக்கும் சூழலில், கேரளத்தைச் சேர்ந்தவொரு வாலிபர் இளம்பெண்கள் நால்வரை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தி வந்திருப்பது தெரிய வந்துள்ளது... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற ஆசிரியை.. கண்ணியத்துடன் இறக்கும் உரிமையைப் பெறப்போகும் முதல் ஆள்!

தேவநாகரி: கர்நாடக மாநிலத்தில் பல்வேறு சட்டப்போராட்டங்களுக்குப் பின், ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியை காரிபசம்மா (85) கண்ணியத்துடன் இறக்கும் உரிமையைப் பெறும் முதல் ஆளாக மாறப்போகிறார்.கண்ணியத்துடன் இறக்... மேலும் பார்க்க

கட்சிவிட்டுக் கட்சி தாவுவது காங்கிரஸ் கலாசாரம்! -ஆம் அத்மி

புது தில்லி : ஆம் ஆத்மி கட்சிக்குள் எந்தவொரு சலசலப்பும் இல்லை என்று பஞ்சாப் மாநில முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற... மேலும் பார்க்க