செய்திகள் :

'இந்தியா பின்வாங்கினால்...' - ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர்

post image

'இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூருக்கு' பதிலடி கொடுக்கப்படும்' என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இன்று காலை அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதை தொடர்ந்து பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் இப்போது அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, "கடந்த இரண்டு வாரங்களாகவே, இந்தியாவிற்கு எதிராக நாங்களாக எந்தத் தாக்குதலையும் தொடங்கமாட்டோம் என்று கூறி வருகிறோம்.

ஆனால், எங்கள் மீது தாக்குதல் நடந்தால், நாங்கள் அதற்கு பதிலடி கொடுப்போம். இந்தியா பின்வாங்கினால், நாங்களும் இந்தப் பதற்றத்தை முடிவுக்கு கொண்டுவருவோம்" என்று பேசியுள்ளார்.

எல்லையில் இந்திய ராணுவம்
எல்லையில் இந்திய ராணுவம்

கடந்த ஏப்ரல் 22-ம் தேதி, காஷ்மீர் பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் பஹல்காமுக்கு சுற்றுலா வந்த 25 பேரும், அவர்களை காப்பாற்ற சென்ற ஒரு உள்ளூர்வாசியும் உயிரிழந்தனர்.

இந்தத் தாக்குதல் மற்றும் உயிரிழப்புகள் இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை கிளப்பியது. அதற்கு பதிலடியாகத் தான் 'ஆபரேஷன் சிந்தூர்' -ஐ கையிலெடுத்துள்ளது இந்திய அரசு.

ஆசிப்பின் இந்தப் பதில், பாகிஸ்தான் தாக்குதலை முன்னெடுக்குமா... அல்லது பின்வாங்குமா? என்கிற எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

Operation Sindoor முடியவில்லையா? - விமானப்படை சொல்வதென்ன?

இந்தியா பாகிஸ்தான் இடையே போர்-பதற்றம் முடிவுக்கு வந்து போர் நிறுத்தம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் நேற்று இரவில் பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை மீறியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த நிலையில் ஆபரேஷன் சி... மேலும் பார்க்க

India - Pakistan: `அமெரிக்காவின் தலையீடு குறித்து விவாதிக்க வேண்டும்' - ராகுல் காந்தி கடிதம்

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை நடத்தியது.இதன் மூலம் பாகிஸ்தானில் உள்ள பல்வேறு தீவிரவாத மையங்கள் அழிக்கப்பட்டன.இதனால் பாகிஸ்தான... மேலும் பார்க்க

India - Pakistan : "முடிவெடுப்பதில் இரு நாடுகளுக்கும் உதவ முடிந்ததில் பெருமை கொள்கிறேன்" - ட்ரம்ப்

பஹல்காம் தாக்குதலுக்கு (ஏப்ரல் 22) பதிலடியாக, தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் (மே 7) நடத்தியது. அதைத் தொடர்ந்து, மே 8-ம் தேதி இரவு ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகள் மீது பாகிஸ்தான் ட்ர... மேலும் பார்க்க

”திமுக ஆட்சி மத்தியில் கூட்டணி ஆட்சி, மாநிலத்தில் குடும்ப ஆட்சியாக மாறிவிட்டது”-சீமான்

தஞ்சாவூரில் தமிழ்த்தேசிய பேரியக்கம் சார்பில் கூட்டரசுக் கோட்பாடு சிறப்பு மாநாடு நடைபெற்றது. இதில் பெ.மணியரசன், சீமான், கி.வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிறைவாக சீமான் பேசியதாவது, "மத்தியி... மேலும் பார்க்க

`இந்தியா, பாக் பிரச்னையில் அமெரிக்கா ஏன்..?' - காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் கேள்வி!

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை நடத்தியது. இதன் மூலம் பாகிஸ்தானில் உள்ள பல்வேறு தீவிரவாத மையங்கள் அழிக்கப்பட்டன. இதனால் பாகிஸ்த... மேலும் பார்க்க

India - Pakistan : "பாகிஸ்தான் அதை நிறுத்தும்வரை நிரந்தர அமைதியே கிடையாது" - ஒவைசி சொல்வதென்ன?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு (ஏப்ரல் 22) பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளிலுள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் (மே 7) நடத்தியது... மேலும் பார்க்க