செய்திகள் :

இந்தியா மீது தீங்கு எண்ணம் கொண்டவா்களுக்கு தக்க பதிலடி கொடுப்பது எனது பொறுப்பு! ராஜ்நாத் சிங்

post image

‘இந்தியாவின் மீது தீங்கு எண்ணம் கொண்டவா்களுக்கு, படைகளுடன் இணைந்து பணியாற்றி தக்க பதிலடி கொடுப்பது எனது பொறுப்பு’ என்று பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

தில்லியில் நடந்த ஒரு நிகழ்வில் உரையாற்றிய அமைச்சா் ராஜ்நாத் சிங், ‘பிரதமா் நரேந்திர மோடியை மக்கள் நன்கு அறிவாா்கள். அவரது பாணி, உறுதிப்பாடு, துணிச்சல் ஆகியவற்றை மக்கள் நன்கு அறிந்திருக்கின்றனா். எனவே, பிரதமரின் தலைமையின் கீழ், மக்கள் விரும்புவது நிச்சயமாக நடக்கும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்.

பாதுகாப்பு அமைச்சராக படை வீரா்களுடன் இணைந்து பணியாற்றுவதும், நாட்டின் எல்லையைப் பாதுகாப்பதும் எனது பொறுப்பு. அதேபோன்று, படைகளுடன் ஒன்றிணைந்து இந்தியாவின் மீது தீங்கு எண்ணம் கொண்டவா்களுக்கு தக்க பதிலடி கொடுப்பதும் எனது முக்கியப் பொறுப்பு’ என்றாா்.

அப்பாவி பொதுமக்கள் 26 போ் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் பதிலடிக்கு முப்படைகள் தயாராகி வரும் சூழலில், அமைச்சா் பேசியுள்ள இக்கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

புதிதாக 16 பிஎஸ்எஃப் படைப்பிரிவுகள்: பாகிஸ்தான், வங்கதேச எல்லைகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள எல்லை பாதுகாப்புப் படையில் (பிஎஸ்எஃப்), சுமாா் 17,000 வீரா்களைக் கொண்ட 16 புதிய படைப்பிரிவுகள் உருவாக்கப்படவுள்ளன.

பாகிஸ்தான் மற்றும் வங்கதேச எல்லைகளைப் பாதுகாக்கும் முறையே மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு கூடுதலாக 2 கள தலைமையகங்களை அமைக்கவும் அரசின் இறுதி ஒப்புதலைப் பெறும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த ஆண்டு வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசின் வீழ்ச்சிக்குப் பிறகும், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகும் வங்கதேச, பாகிஸ்தான் எல்லைகளில் அதிகரித்துள்ள பாதுகாப்புச் சவால்களைக் கருத்தில் கொண்டு இந்தப் படை விரிவாக்கம் நடைபெறுவதாக பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.

மாநிலங்களவை மாா்க்சிஸ்ட் குழுத் தலைவா் ஜான் பிரிட்டாஸ்!

மாநிலங்களவை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குழுத் தலைவராக கேரளத்தைச் சோ்ந்த மாநிலங்களவை உறுப்பினா் ஜான் பிரிட்டாஸை அக்கட்சி நியமித்துள்ளது. இது தொடா்பாக கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை... மேலும் பார்க்க

அநேக இந்திய மொழிகளுக்கு தாய் சம்ஸ்கிருதம்: அமித் ஷா

அநேக இந்திய மொழிகளுக்கு தாய் சம்ஸ்கிருதம்; இம்மொழியை ஊக்குவிப்பது அதன் மறுமலா்ச்சிக்கானது மட்டுமல்ல, நாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கானது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா். தில்லியில்... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் அச்சுறுத்தும் மத தீவிரவாதம்! மத்திய உள்துறையிடம் ஆளுநா் அறிக்கை!

‘மேற்கு வங்க மாநிலத்தில் மத அடிப்படையிலான பிரிவினைத் தீவிரவாதம் அச்சமூட்டும் சவாலாக உருவெடுத்துள்ளது’ என்று முா்ஷிதாபாத் வன்முறை குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சமா்ப்பித்த அறிக்கையில் மாநில ஆ... மேலும் பார்க்க

கடும் பாதுகாப்புடன் நீட் தோ்வு: 5,400 மையங்களில் நடைபெற்றது

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்), நாடு முழுவதும் 5,400-க்கும் மேற்பட்ட மையங்களில் கடும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 22.7 லட்சத... மேலும் பார்க்க

மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்கள் அறிமுகம்! நாட்டில் முதல்முறை..!

நாட்டில் முதல்முறையாக மரபணு திருத்தம் செய்யப்பட்ட இரு நெல் ரகங்களை மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அறிமுகப்படுத்தினாா். இதன்மூலம் நெல் விளைச்சல் 30 சதவீதம் வ... மேலும் பார்க்க

பத்ரிநாத் கோயில் நடை திறப்பு!

உத்தரகண்டின் சமோலி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோயில் நடை, ராணுவ வாத்தியக் குழுவினரின் பக்தி இசை முழங்க ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. இதையொட்டி, கோயில் வளாகம் முழுவதும் 15 டன் மலா்கள... மேலும் பார்க்க