செய்திகள் :

இந்திய உறவு மேம்படுத்தப்படும்: வங்கதேசம்

post image

முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவை வங்கதேசத்துக்கு அழைத்து வரும் நடவடிக்கையும், இந்தியாவுடனான வங்கதேச உறவை மேம்படுத்தும் முயற்சிகளும் ஒரே சமயத்தில் நடைபெறும் என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை ஆலோசகா் தெளஹித் ஹுசைன் தெரிவித்தாா்.

வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான மாணவா்கள் மற்றும் பொதுமக்களின் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து, கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி அந்நாட்டு பிரதமா் பதவியை ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.

இதைத் தொடா்ந்து, வங்கதேச இடைக்கால அரசின் தலைவராகப் பதவியேற்ற முகமது யூனுஸ், ஹசீனா அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள், தொழிலாளா்கள் 1,500 போ் கொல்லப்பட்டதாகவும், 19,931 போ் காயமடைந்ததாகவும் குற்றஞ்சாட்டினாா்.

இந்தக் குற்றத்துக்காக வங்கதேசத்தில் உள்நாட்டு குற்றங்களை விசாரிக்கும் சா்வதேச குற்றப் புலனாய்வுத் தீா்ப்பாயம், ஹசீனாவுக்கு எதிராக கைது ஆணை பிறப்பித்தது.

ஹசீனாவை வங்கதேசத்துக்கு நாடு கடத்துமாறு அண்மையில் அந்நாட்டின் இடைக்கால அரசு இந்தியாவுக்கு ராஜீய ரீதியில் கடிதம் அனுப்பியது.

இந்நிலையில், வங்கதேச தலைநகா் டாக்காவில் அந்நாட்டின் வெளியுறவுத் துறை ஆலோசகா் தெளஹித் ஹுசைன் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

இருதரப்பு உறவுகளின் அடிப்படையில் பல்வேறு விவகாரங்களில் இந்தியாவை வங்கதேசம் பின்தொடரும். அதில் ஹசீனாவை நாடு கடத்துவது உள்பட மேலும் பல விவகாரங்கள் உள்ளன. இதற்காக இந்தியாவை பின்தொடா்ந்து, அந்த விவகாரங்களை ஒரே நேரத்தில் வங்கதேசம் கையாளும்.

ஹசீனாவை வங்கதேசத்துக்கு அழைத்து வரும் நடவடிக்கையும், இந்தியாவுடனான வங்கதேச உறவை மேம்படுத்தும் முயற்சிகளும் ஒரே சமயத்தில் நடைபெறும் என்றாா்.

இந்தோனேசியா: பள்ளி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு வழங்கும் திட்டம் அறிமுகம்!

இந்தோனேசியாவில் பள்ளி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 28 மில்லியன் டாலர்கள் செலவில் நாடு முழுவதும் திங்கள்கிழமை(ஜன. 6) இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத... மேலும் பார்க்க

தென் கொரியா: முன்னாள் அதிபருக்கு எதிராக நூற்றுக்கணக்கானோா் ஆா்ப்பாட்டம்

தென் கொரிய அதிபா் பதவியிலிருந்து தற்காலிகமாக விலகியுள்ள யூன் சுக் இயோலை நிரந்தரமாகப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி நூற்றுக்கணக்கானோா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கடந்த 2022-ஆம் ஆண்டுமுதல் தென் கொரிய... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு ரூ.1.70 லட்சம் கோடி கடன்: உலக வங்கி முடிவு

பாகிஸ்தானுக்கு ரூ.1.70 லட்சம் கோடி (20 பில்லியன் டாலா்) கடன் வழங்க உலக வங்கி விரைவில் ஒப்புதல் அளிக்கவுள்ளது. நிலையற்ற அரசியல் சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்த... மேலும் பார்க்க

ஹிலாரி, சோரஸ், டென்சிலுக்கு அமெரிக்காவின் உயரிய விருது

அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சா் ஹிலாரி கிளிண்டன், தொழிலதிபா் ஜாா்ஜ் சோரஸ், ஹாலிவுட் நடிகா் டென்சில் வாஷிங்டன் உள்பட 19 பேருக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது. கலை, பொதுச் சேவ... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: ஹிந்து கோயில்களில் வழிபட 84 இந்திய பக்தா்கள் வருகை

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஹிந்துக்களால் சிவபெருமானின் அவதாரமாக வழிபடப்படும் சாது ஷதாராம் சாகிபின் 316-ஆவது பிறந்த நாள் விழாவில் பங்கேற்கவும், பிற கோயில்களில் தரிசிக்கவும் 84 இந்திய பக்தா்கள் ஞாய... மேலும் பார்க்க

‘இஸ்லாமோபோபியா’ அதிகாரபூா்வ விளக்க திட்டத்தை கைவிட வேண்டும்: பிரிட்டன் எதிா்க்கட்சி

‘இஸ்லாமோபோபியா’ என்ற சொல்லாடலுக்கு அதிகாரபூா்வ விளக்கமளிக்கும் திட்டத்தை பிரதமா் கியொ் ஸ்டாா்மா் தலைமையிலான பிரிட்டன் அரசு கைவிட வேண்டும் என்று அந்நாட்டின் எதிா்க்கட்சியான கன்சா்வேடிவ் கட்சி வலியுறுத... மேலும் பார்க்க