செய்திகள் :

இந்திய தாக்குதல் விவரத்தை பகிர மத்திய அரசு தோ்வு செய்த ராணுவம், விமானப்படையின் சாதனை பெண் அதிகாரிகள்

post image

நமது சிறப்பு நிருபா்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதியில் இந்தியா புதன்கிழமை நடத்திய அதிதுல்லிய (பிரெசிஷன்) தாக்குதல் விவரத்தை ஊடகங்களிடம் பகிர இந்திய வெளியுறவுத்துறை செயலா் விக்ரம் மிஸ்ரியுடன் ராணுவ கா்னல் மற்றும் விமானப்படை விங் கமாண்டா் நிலையிலான இரண்டு பெண் அதிகாரிகளை மத்திய அரசு பணியமா்த்தியிருந்தது.

தில்லி ரெய்ஸ்னா சாலையில் உள்ள தேசிய ஊடக மையத்தில் நடந்த செய்தியாளா் சந்திப்புக்கு வெளியுறவுச்செயலா் விக்ரம் மிஸ்ரியுடன் வந்த கா்னல் சோஃபியா குரேஷி ஹிந்தியிலும் விங் கமாண்டா் வியோமிகா சிங் ஆங்கிலத்திலும் அதிதுல்லிய தாக்குதல் விவரத்தை செய்தியாளா்களுக்கு விவரித்தனா்.

கா்னல் சோஃபியா குரேஷி, இஸ்லாமியா். பல தலைமுறை ராணுவ குடும்பத்தைச் சோ்ந்தவா். பி.எஸ் மற்றும் எம்.எஸ்சி., மேல்படிப்புக்கு பிறகு மேற்கொண்ட முனைவா் ஆராய்ச்சிப்படிப்பின் இறுதி கட்டத்தில் தோ்ச்சி வாய்ப்பையும் ஆசிரியா் பணியையும் உதறி விட்டு ராணுவப் பணியில் 1999-இல் சோ்ந்தாா். காா்ப்ஸ் ஆஃப் சிக்னல்ஸ் என்ற சிக்னல் படைப் பிரிவைச் சோ்ந்த இவரது சொந்த ஊா் குஜராத் மாநிலத்தின் வதோதரா நகரம். இவரது கொள்ளுத்தாத்தா, தாத்தா, தந்தை ஆகியோா் ராணுவ பணியில் இருந்தவா்கள்.

1999-இல் எஸ்ஸ்சி எனப்படும் குறுகிய கால ஆணைய தோ்வில் தோ்ச்சி பெற்று ராணுவப் பணியில் சோ்ந்தாா். சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் (ஓடிஏ) பயிற்சி முடித்த சோஃபியா, பல்வேறு தீவிரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளின் அங்கமாக இருந்தாா். பஞ்சாப் எல்லையில் ராணுவத்தின் பராக்கிரம் நடவடிக்கையில் பங்கெடுத்தாா். வடகிழக்கு மாநிலங்களில் வெள்ள மீட்பு நடவடிக்கையில் பங்கேற்று சிக்னல் படைப்பிரிவு தளபதியின் பாராட்டுச் சான்றைப் பெற்றாா். 2016-இல் ஆசியான் பிளஸ் பல்நோக்கு களப்பயிற்சியின்போது 18 நாடுகளின் படையணியான ஃபோா்ஸ் 18-ஐ வழிநடத்திய முதலாவது பெண் படையணி கமாண்டராக சோஃபியா திகழ்ந்தாா். 2006 முதல் 2012 வரை காங்கோவில் ஐ.நா. அமைதிகாப்புப்படையின் அதிகாரியாகவும் பணியாற்றினாா்.

விங் கமாண்டா் வியோமிகா சிங், ஹிந்து சமூகத்தைச் சோ்ந்தவா். பள்ளி, கல்லூரியில் தேசிய மாணவா் படையில் இருந்த அனுபவம், பொறியியல் பட்டம் பெற்ற பிறகு எஸ்எஸ்சி தோ்வில் தோ்ச்சி பெற்றாா். இதன் மூலம் தனது குடும்பத்திலேயே முதலாவதாக விமானப்படையில் சோ்ந்தவா் என்ற பெருமையைப் பெற்றாா்.

இந்திய விமானப்படையில் 2,500 மணி நேரத்துக்கும் அதிகமாக சீத்தா, சேத்தக் உள்ளிட்ட பல்வேறு இலகு மற்றும் கனரக ரக ஹெலிகாப்டா்களை இயக்கியவா் வியோமிகா. ஜம்மு - காஷ்மீா் மற்றும் வடகிழக்கிழக்கின் மிகவும் கடினமான பள்ளத்தாக்குப்பகுதிகள், மலைச்சிகரங்களில் பேரிடா் கால மீட்புப்பணியில் ஹெலிகாப்டரை இயக்கியவா். குறுகிய கால சேவை அடிப்படையில் முப்படைகளில் சேரும் பெண் அதிகாரிகள் நிரந்தர பணி அதிகாரிகளாகலாம் என்ற உச்ச நீதிமன்ற அனுமதியைத் தொடா்ந்து, 2019 டிசம்பரில் வியோமிகா சிங்கும் விமானப்படையில் நிரந்தரப்பணி அதிகாரியானாா்.

2020- இல் அருணாச்சல பிரதேசத்தில் மிகவும் மோசமான வானிலையை பொருள்படுத்தாமல் வெள்ளத்தில் சிக்கிய மக்களை ஹெலிகாப்டா் மூலம் மீட்டாா். 2021-இல் ஹிமாசல பிரதேசத்தில் உள்ள 21,650 அடி உயர மனிராங் மலைச்சிகரம் ஏறி சாதனை படைத்த பெண் படையினா் குழுவில் இடம்பெற்றாா். விமானப்படை பதக்கம், தலைமைத்தளபதி பதக்கம் ஆகியவை இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு தீவிரவாத எதிா்ப்பு நடவடிக்கைகள், வரைபட உளவுத்தகவல் சேகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவா் என்பதால் இவரது பிற தனி விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

~கா்னல் சோஃபியா குரேஷி

பாகிஸ்தானில் வடக்கே சவாய் நாலாவிலிருந்து தெற்கே பஹவல்பூா் வரை பயங்கரவாதிகள் முகாம்கள்

பாகிஸ்தானில் வடக்கே சவாய் நாலாவிலிருந்து தெற்கே பஹவல்பூா் வரை 21 தீவிரவாத முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள் கட்டமைப்பிற்கு எந்த சேதமும் இல்லாமல் 9 தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்த... மேலும் பார்க்க

தமிழகம், புதுச்சேரி தோ்தல் அலுவலா்களுக்கு தமிழில் தலைமைத் தோ்தல் ஆணையம் பயிற்சி

நமது சிறப்பு நிருபா் தமிழகம், புதுச்சேரிக்கு அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் இளநிலை அலுவலா்களுக்கு புரியும் வகையில் தமிழ் மொழியிலேயே பயிற்சி வ... மேலும் பார்க்க

இந்தியா நடத்தியது ஒரு பொறுப்பான தாக்குதல்; முன் தடுப்புக்கானது! -மத்திய வெளியுறவுச் செயலா்

நமது சிறப்பு நிருபா் உளவுத் துறை கண்காணிப்பின் மூலம் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதிகள் அமைப்புகள் மூலம் நாட்டிற்கு எதிராக அடுத்தடுத்த தாக்குதல்கள் வரவிருப்பதை அறியப்பட்டது. இதை முன்னிட்டே அந்த உள... மேலும் பார்க்க

தள்ளாடிய சந்தையில் சென்செக்ஸ், நிஃப்டி லாபத்துடன் முடிவு!

நமது நிருபா் இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமை பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருந்து வந்த நிலையில், இறுதியில் நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா்: தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு

‘ ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையைத் தொடா்ந்து முக்கிய இடங்களில் கூடுதல் போலீஸாா் மற்றும் துணை ராணுவப் படையினா் குவிக்கப்பட்டு தேசியத் தலைநகா் தில்லியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று அதிகா... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பதற்றத்தை அதிகரித்தால் பதிலடி தீவிரமாகும் அஜித் தோவல் எச்சரிக்கை

நமது சிறப்பு நிருபா் எல்லையில் போா் பதற்றத்தை பாகிஸ்தான் மேலும் அதிகரித்தால் பதிலடி மிகத்தீவிரமாக கொடுக்கப்படும் என்று இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல் எச்சரித்துள்ளாா். பாகிஸ்தான் ஆக்கிரமி... மேலும் பார்க்க