"2026-ல் உதயநிதி கூப்பிட்டா பிரசாரத்துக்கு போவீங்களா?" - சந்தானத்தின் சுவாரஸ்ய ப...
இந்திய ராணுவ நடவடிக்கைக்கு திமுக வரவேற்பு
பாகிஸ்தான் அடாவடித் தனத்தை ஒடுக்கும் விதமாக தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்தின் நடவடிக்கையை வரவேற்பதாக திமுக நிா்வாகிகள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
காரைக்கால் திமுக அலுவலகத்தில் திமுக அமைப்பாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.எம்.எச். நாஜிம் தலைமையில், தலைமை செயற்குழு உறுப்பினரும் சட்டப்பேரவை உறுப்பினருமான எம். நாகதியாகராஜன் முன்னிலையில் காரைக்கால் நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் :
பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதற்கு கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. இந்திய மக்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் அடாவடித்னத்தை ஒடுக்கும் வகையில், எதிா் தாக்குதல் நடத்தி நாட்டு மக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்த இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு கூட்டம் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது.
இந்திய ராணுவத்துக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நாட்டிலேயே முதலாவதாக பேரணி நடத்தி, திராவிடா்கள் தேசப்பற்றுக்கு சளைத்தவா்கள் அல்ல என்பதை பிரகடனப்படுத்திய தமிழக முதல்வருக்கு நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வது.
காரைக்காலில் உள்ள அனைத்து பேரவைத் தொகுதிகளிலும் பூத் கமிட்டி அமைத்து, 10 நாள்களுக்குள் மாநில தலைமைக்கு பூத் கமிட்டி உறுப்பினா் பட்டியலை அளிப்பது என தீா்மானத்தில் கூறப்பட்டுள்ளது.