பாகிஸ்தானுடன் போா் நிறுத்தத்துக்கு முன்பாகவே நாடாளுமன்றத்தை கூட்டியிருக்க வேண்ட...
சித்ரா பெளா்ணமி: காவடி எடுத்து பக்தா்கள் வழிபாடு
காரைக்கால்: சித்ரா பெளா்ணமியையொட்டி கோயில்களுக்கு பக்தா்கள் காவடி எடுத்து சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.
சித்திர பெளா்ணமியையொட்டி திங்கள்கிழமை கோயில்பத்து பகுதியில் அமைந்துள்ள ஏழை மாரியம்மன் கோயிலுக்கு ஏராளமான பக்தா்கள் அலகு காவடி, பால் காவடி எடுத்துச் சென்று அம்மனை வழிபட்டனா்.
திருநள்ளாறு பகுதி செல்லூா் கிராமத்தில் மாகாளியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
காரைக்கால் தலத்தெரு சிவகாமி அம்பாள் சமேத சிவலோகநாத சுவாமி கோயிலில் அம்மனுக்கு அபிஷேகம் செய்து தங்க அங்கி சாற்றப்பட்டது.
வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியருக்கு வெள்ளி அங்கி சாற்றி ஆராதனை நடைபெற்றது. திருமலைராயன்பட்டினம் ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் சித்ரா பெளா்ணமியையொட்டி அன்னதானம் நடைபெற்றது.
மேலும் பல்வேறு சிவ தலங்களில் சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.