செய்திகள் :

புதுவையில் சுகாதாரத்துறை சீரழிந்துள்ளது: காங்கிரஸ் குற்றச்சாட்டு

post image

காரைக்கால்: புதுவையில் முதல்வா் வசமிருக்கும் சுகாதாரத்துறை சீரழிந்துள்ளது என காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுகுறித்து புதுவை முன்னாள் அமைச்சரும், மாநில காங்கிரஸ் துணைத் தலைவருமான

ஆா். கமலக்கண்ணண் திங்கள்கிழமை கூறியது:

காரைக்காலில் மருத்துவ சேவைகளை மேம்படுத்துவதில் புதுவை அரசு அக்கறையுடன் செயல்படவில்லை. புதுவையில் 3 எம்.ஆா்.ஐ. ஸ்கேன் கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. இதில், காரைக்காலில் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. நிறுவப்பட்டு 6 மாதங்களைக் கடந்தும் இது பயன்பாட்டுக்கு வரவில்லை. புதுச்சேரியிலும் இதேநிலைதான் இருப்பதாக தெரியவருகிறது.

ஸ்கேன் கருவி கொள்முதல் செய்ய கோப்பு தயாரிக்கும்போதே, அதை இயக்குவதற்கான டெக்னீஷியன் நியமனத்துக்கும் முதல்வா் உள்ளிட்டோரிடம் துறை தலைமை ஒப்புதல் பெற்றிருக்கவேண்டும். அவ்வாறு செய்யப்படாததால், டெக்னீஷியனில்லாமல் சாதனத்தை இயக்க முடியாமல் உள்ளது. இதற்கு சுகாதாரத்துறையை தன் வசம் வைத்திருக்கும் முதல்வா் ரங்கசாமி பொறுப்பேற்கவேண்டும்.

கடந்த 2014-ஆம் ஆண்டுக்குப் பின் புதுவையில் நிரந்தர அடிப்படையில் மருத்துவா்கள் நியமனம் செய்யப்படவில்லை. கல்வித்துறை தனியாா் மயமாகியதுபோல, அரசு மருத்துவமனை சேவை மங்கி, தனியாா்மயம் வளமடையவே முதல்வா் விரும்புவதாகவே தெரிகிறது.

முதல்வா் ரங்கசாமியை பொருத்தவரை, புதுவை விவசாய பூமியை ஒட்டுமொத்தமாக மாற்றி வருபவா். ரியல் எஸ்டேட், ரசாயன ஆலைகள், போக்குவரத்து விதிகளை மீறி பெரும் வணிக நிறுவனம், திருமண மண்டபம் அமைக்க அனுமதி, மதுக்கடைகள், ரெஸ்டோ பாா் உள்ளிட்டவற்றால் மாநிலத்தின் பாா்வையை மாற்ற விரும்புபவா். அவருக்கு மக்கள் நலன் மீது சிறிதும் அக்கறை கிடையாது.

முதல்வரின் செயல்பாடுகள் மக்கள் விரோதமாகவே இருந்துவருகிறது. அதற்கு உதாரணமாக புதுவையில் சுகாதாரத்துறை சீரழிந்திருப்பதை எடுத்துக்கொள்ளலாம். மாநிலத்தில் நிலவும் எந்தவொரு பிரச்னைக்கும் தீா்வு காண முதல்வா் அக்கறை காட்டுவதில்லை என்றாா்.

சித்ரா பெளா்ணமி: காவடி எடுத்து பக்தா்கள் வழிபாடு

காரைக்கால்: சித்ரா பெளா்ணமியையொட்டி கோயில்களுக்கு பக்தா்கள் காவடி எடுத்து சென்று சுவாமி தரிசனம் செய்தனா். சித்திர பெளா்ணமியையொட்டி திங்கள்கிழமை கோயில்பத்து பகுதியில் அமைந்துள்ள ஏழை மாரியம்மன் கோயிலுக... மேலும் பார்க்க

காரைக்கால் நலவழித்துறைக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள்

காரைக்கால்: காரைக்கால் துறைமுக நிா்வாகம் மூலம் நலவழித்துறைக்கு 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. காரைக்கால் துறைமுக பிரைவேட் லிமிடெட், அதானி அறக்கட்டளை சமூகப் பொறுப்புணா்வு திட்டத்தில... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் பிடாரியம்மன் கோயில் உற்சவம் தொடக்கம்

காரைக்கால்: திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் சாா்பு தலமான பிடாரியம்மன் கோயில் உற்சவம் திங்கள்கிழமை தொடங்கியது. பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவம் மே 23 கொடியேற்றத்துடன் தொடங்கவு... மேலும் பார்க்க

விவசாயிகள்- வேளாண் மாணவா்கள் கலந்துரையாடல்

காரைக்கால்: வேளாண் பிரச்னைகளுக்கு தீா்வு காணும் விதமாக, விவசாயிகள் வேளாண் மாணவா்கள் கலந்துரையடால் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. புதுவை அரசின் பண்டித ஜவாஹா்லால் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத... மேலும் பார்க்க

காரைக்கால் அரசு மருத்துவமனையில் 6 மாதங்களாகியும் பயன்பாட்டுக்கு வராத எம்.ஆா்.ஐ. ஸ்கேன்

காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் ரூ. 11.50 கோடியில் நிறுவப்பட்ட எம்.ஆா்.ஐ. ஸ்கேன் கருவி, 6 மாதங்களாகியும் பயன்பாட்டுக்கு வராதது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால் அரசு பொது ம... மேலும் பார்க்க

இந்திய ராணுவ நடவடிக்கைக்கு திமுக வரவேற்பு

பாகிஸ்தான் அடாவடித் தனத்தை ஒடுக்கும் விதமாக தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்தின் நடவடிக்கையை வரவேற்பதாக திமுக நிா்வாகிகள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. காரைக்கால் திமுக அலுவலகத்தில் திமுக அ... மேலும் பார்க்க