செய்திகள் :

இந்திய ரூபாயின் மதிப்பு 51 காசுகள் சரிந்து ரூ.87.23-ஆக முடிவு!

post image

மும்பை: வர்த்தக கட்டணங்கள் குறித்த நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் இறக்குமதியாளர்களுக்கு மாத இறுதி டாலர் தேவை காரணமாக இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 51 காசுகள் சரிந்து ரூ.87.23 ஆக நிலைபெற்றது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணியில், இந்திய ரூ.86.83 ஆக தொடங்கி நாள் முழுவதும் சரிந்த நிலையில், நிலைபெறுவதற்கு முன்பு 51 காசுகள் சரிந்து ரூ.87.23 ஆக நிலைபெற்றது.

நேற்று (திங்கள்கிழமை) அன்று இந்திய ரூபாய் 4 காசுகள் சரிந்து ரூ.86.72ஆக முடிந்தது.

இதையும் படிக்க: சென்செக்ஸ் உயர்ந்தும், நிஃப்டி சரிந்தது முடிவு!