செய்திகள் :

இந்தி திணிப்பு: "மகாராஷ்டிராவில் அஞ்சும் பட்னாவிஸ்; மோடி பதிலளிக்க வேண்டும்" - ஸ்டாலின் ட்வீட்!

post image

புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தி திணிக்கப்பட்டதாக, கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

பின்னர், "மும்மொழிக் கொள்கையின்படி மாணவர்கள் கற்றுக்கொள்ளும் மூன்றில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும். அவை தமிழ், குஜராத்தி என எந்த மொழியாகவும் இருக்கலாம். இந்தி திணிக்கப்படவில்லை" என விளக்கம் அளித்தார்.

பட்னாவிஸ்
பட்னாவிஸ்

இந்த நிலையில், மராட்டியத்தில் தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு எழுந்த எதிர்ப்பைச் சுட்டிக்காட்டி, மத்திய கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் மோடியிடம் கேள்விகளை எழுப்பியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இது குறித்த அவரது சமூக வலைதள பதிவில், "மூன்றாவது மொழியாக இந்தியைத் திணித்ததற்கு பெரும் எதிர்ப்புகளைச் சந்தித்த மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், இப்போது அங்கு மராத்தி மட்டுமே கட்டாயம் என்று கூறுகிறார்.

இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி திணிக்கப்படுவதற்கு எதிராக பொதுமக்கள் பரவலாக கண்டனம் தெரிவித்ததால், அவர் அடைந்துள்ள அச்சத்தின் வெளிப்பாடே இது.

மாண்புமிகு பிரதமரும் கல்வி அமைச்சரும் இந்த விஷயங்களைத் தெளிவுபடுத்த வேண்டும்.

இந்தி திணிப்பு எதிர்ப்பு
இந்தி திணிப்பு எதிர்ப்பு

* தேசிய கல்விக் கொள்கையின் கீழ் மகாராஷ்டிராவில் மராத்தி தவிர, மூன்றாவது மொழியாக வேறு எந்த மொழியும் கட்டாயமில்லை என்ற அவரது நிலைப்பாட்டை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கிறதா?

* அப்படியானால், புதிய கல்விக் கொள்கையில் மூன்றாம் மொழி கட்டாயமாகக் கற்பிக்கப்பட வேண்டியதில்லை என்பதை உறுதிப்படுத்தும் தெளிவான உத்தரவை மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் பிறப்பிக்குமா?

* கட்டாய மூன்றாம் மொழி கற்பித்தலுக்கு மாநிலம் குழுசேர வேண்டும் என்ற அடிப்படையில், தமிழ்நாட்டிற்கு அநியாயமாக நிறுத்தி வைக்கப்பட்ட ரூ.2,152 கோடியை மத்திய அரசு விடுவிக்குமா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆணாதிக்கம், ஆபாசம், கொச்சைப் பேச்சு... ஒரு பொன்முடி சிக்கிவிட்டார். ஆனால், அவர்... இவர்?

பெண்களை மட்டம்தட்டிப் பேசுவது, வீடுகளில் காமெடி ஆக்கப்பட்டிருக்கிறது. பெண்களை ஆபாசமாகப் பேசுவது, மேடைகளில் காமெடி ஆக்கப்பட்டிருக்கிறது. அப்படித்தான், சமீபத்தில் தனது `நகைச்சுவை உணர்வை’ மேடையில் அள்ளி ... மேலும் பார்க்க

Adyar park: சுட்டிக்காட்டிய விகடன்; பயன்படுத்த முடியாத நிலையிலிருந்த பூங்காவை சீரமைக்கும் அதிகாரிகள்

சென்னை அடையாறு, இந்திரா நகரில் (வார்டு 170 , மண்டலம் 13 ,பகுதி 40 ) அமைந்துள்ளபெருநகர மாநகராட்சி பூங்காவில் உள்ள சிறுவர் விளையாட்டு திடலில் இருக்கும் விளையாட்டு உபகரணங்கள் ஒன்று கூட பயன்படுத்தும் நிலை... மேலும் பார்க்க

"கட்சிக் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும்" - உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து CPIM மேல்முறையீடு!

தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் வைத்துள்ள கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. பெ.... மேலும் பார்க்க

Pope: 'அடுத்த போப் யார்? - தேர்வு முறை எப்படி நடக்கும் தெரியுமா? - சுவாரஸ்ய தகவல்கள்!

கத்தோலிக்க திருச்சபையின் 266-வது போப்பாகவும், வாட்டிக்கன் நகரத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட போப் பிரான்சிஸ் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். அவருக்குப் பிறகு அடுத்த போப் யார்? என்ற கேள்வி எழுகி... மேலும் பார்க்க

வருவாய்த்துறை அதிகாரியை மிரட்டிய வழக்கு; காங்கிரஸ் எம்.எல்.ஏ-வுக்கு சிறைத் தண்டனை விதித்த கோர்ட்!

கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ-வாக இருப்பவர் ராஜேஷ்குமார். இவர் காங்கிரஸ் இளைஞராணி மாவட்ட தலைவர், காங்கிரஸ் மாவட்ட தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துவந்தார். கருங்கல் ... மேலும் பார்க்க

Vande Bharat: `வழக்கமான என்ஜின்களை விட இலகுவாக இருக்கிறது' - ரயில்வே பாதுகாப்பு ஆணைய அறிக்கை

'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட, இந்திய ரயில்வேயின்முதன்மை ரயிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்,கால்நடைகள்மோதும்போதுகூட கடுமையான விபத்துகளுக்கு ஆளாகிறது என ரயில்வே பாதுகாப்பு அறிக்கை தெரிவ... மேலும் பார்க்க