செய்திகள் :

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு!

post image

இந்தோனேசியாவின் மத்திய தெற்கு மாகாணத்திலுள்ள எரிமலை வெடித்துச் சிதறியுள்ளது.

இந்தோனேசியாவின் கிழக்கு நுஸா தெங்காரா மாகாணத்தின் ஃப்ளோரஸ் தீவிலுள்ள லெவோடோபி லகி லகி எனும் எரிமலை நேற்று (மார்ச் 20) நள்ளிரவு வெடித்துச் சிதறியுள்ளது. அதனைத் தொடர்ந்து, இன்று (மார்ச் 21) காலைக்குள் அந்த எரிமலை மொத்தம் மூன்று முறை வெடித்து அப்பகுதியில் 8,000 மீட்டர் உயரத்திற்கு சாம்பல் படலம் பரவியுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில், தற்போது எந்தவொரு வெடிப்புமின்றி அமைதியாகக் காணப்படும் அந்த எரிமலையை தீவிரமாக இந்தோனேசியா அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

மேலும், அந்த எரிமலை இருக்கும் மாகாணத்தில் கடந்த சில காலமாக நூற்றுக்கணக்கான நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாகவும் கடந்த 7 நாள்களாக அந்த எரிமலையின் செயல்பாடுகள் அதிகரித்து காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: இந்திய அரசுக்குத் தலைவலியாகும் மஸ்க்கின் குரோக் ஏஐ!

இதனைத் தொடர்ந்து, அந்நாட்டு அதிகாரிகள் எரிமலை வெடிப்பிற்கு உச்சக்கட்ட எச்சரிக்கைகளை அறிவித்து அப்பகுதியின் அபாய மணடலத்தை 7 கிலோ மீட்டரிலிருந்து 8 கி.மீ. ஆக உயர்த்தியுள்ளனர்.

இந்த எரிமலை வெடிப்பினால், ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தோனேஷியாவின் பாலி தீவிற்கு இயக்கப்படும் பெரும்பாலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், அத்தீவிற்கான பிற சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்கள் தாமதமாகியுள்ளது.

முன்னதாக, கடந்த 2024 நவம்பர் மாதம் லெவோடோபி லகி லகி எரிமலை வெடித்ததில் 9 பேர் பலியானதுடன் ஏராளமானோர் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

ரமலான் சிறப்பு ரயில்கள்: முன்பதிவு தொடங்கியது!

ரமலான் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது.ரமலான் பண்டிகையையொட்டி கூட்ட நெரிசலைக் குறைக்க திருச்சி - தாம்பரம் ஜன் சதாப்தி சிறப்பு விரைவு ரயிலானது (06048) வரும்... மேலும் பார்க்க

தலைநகரின் முக்கிய கட்டடங்களைக் கைப்பற்றியதாக சூடான் ராணுவம் அறிவிப்பு!

வட ஆப்பிரிக்க நாடான சூடானின் ராணுவப் படைகள் தலைநகர் கார்டூமிலுள்ள முக்கிய கட்டடங்களைக் கைப்பற்றியதாகத் தெரிவித்துள்ளது.சூடான் ராணுவம் அவர்களது எதிராளிகளான துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகளின் (ஆர்.எஸ்.எ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் கையெறி குண்டு தாக்குதல்! 3 பேர் பலி!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் நடைபெற்ற கையெறி குண்டு தாக்குதலில் 3 பலியாகியுள்ளனர்.கைபர் பக்துன்குவா மாகாணத்தின் ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள குர்ராம் மாவட்டத்தில் கட்டுமானம் மேற்கொ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு 5 கொலைகள்; அதிமுக ஆட்சியைவிட அதிகம்! - அன்புமணி ராமதாஸ்

அதிமுக ஆட்சியைவிட திமுக ஆட்சியில் படுகொலைகள் அதிகமாக நடந்திருப்பதாகவும் இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? எனவும் பாமகதலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில்... மேலும் பார்க்க

பிலிப்பின்ஸை உளவுப் பார்க்கின்றதா சீனா? தொடரும் உளவாளிகளின் கைதுகள்!

பிலிப்பின்ஸ் நாட்டில் சட்டவிரோதமாக தகவல் சேகரித்த சீன உளவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிலிப்பின்ஸில் அரசு மற்றும் ராணுவத்தின் முக்கிய துறைகளில் சீனாவின் ஈடுபாடுள்ளதா? என்று எழுந்த சந்தேகத்தினால் அந... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு: முதல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன?

நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக பாதிக்கப்படக்கூடிய இந்தியாவின் பல்வேறு மாநிலக் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான முதல் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட... மேலும் பார்க்க