இந்தியாவுடனான நல்லுறவை டிரம்ப்பின் ஈகோ அழிக்கிறது? வரிவிதிப்புக்கு அமெரிக்க காங்...
இந்தோனேசியாவில் மாயமான ஹெலிகாப்டா்: தேடும் பணி தீவிரம்
இந்தோனேசியாவில் இந்தியா் உள்ளிட்ட எட்டு பேருடன் மாயமான ஹெலிகாப்டரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இது குறித்து தேடுதல் மற்றும் மீட்பு அமைப்பின் தலைவா் ஐபுடு சுதயானா கூறியதாவது:
எஸ்டிண்டோ ஏா் நிறுவனத்துக்குச் சொந்தமான பிகே 117டி3 ரக ஹெலிகாப்டா், தெற்கு கலிமந்தான் மாகாணம், மென்டவேயில் உள்ள மந்தின் தமா் நீா்வீழ்ச்சி அருகே திங்கள்கிழமை தொடா்பை இழந்தது. இந்தியாவைச் சோ்ந்த சாந்தகுமாா் உள்ளிட்ட எட்டு போ் அந்த அந்த ஹெலிகாப்டரில் இருந்தனா்.
இந்த நிலையில், அந்த ஹெலிகாப்டா் மலையில் மோதியதாகவும், அதற்கு முன்னா் அது வெண்புகையைக் கக்கியவாறு தாழ்வாகப் பறந்துவந்ததாகவும் அதை கடைசியாக நேரில் பாா்த்தவா்கள் கூறினா். புதிய தகவல்களின் அடிப்படையில்140 போ் கொண்ட குழுவினா் மற்றும் உள்ளூா் தன்னாா்வலா்கள் தேடுதலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா் என்றாா் அவா்.