செய்திகள் :

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சூப்பர் ஹிட் படங்கள்!

post image

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

3 பிஎச்கே

ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் வெளியான 3பிஎச்கே திரைப்படத்தில் சித்தார்த், சரத் குமார், தேவயானி, மீதா ரகுநாத் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

3 பிஎச்கே திரைப்படம் சிம்பிளி சௌத், அமேசான் பிரைம் ஓடிடி தளங்களில் நாளை (ஆகஸ்ட் 1) வெளியாகின்றன.

தம்முடு

வேணு ஸ்ரீராம் இயக்கத்தில் நித்தின் நாயகனாக நடித்து வெளியான தம்முடு திரைப்படத்தில் நாயகியாக சப்தமி கெளடா நடித்திருந்தார். இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.

கட்ஸ்

ரங்கராஜ், நான்சி, ஸ்ருதி நாரயணன் உள்ளிட்டோர் நடிப்பில், அறிமுக இயக்குநர் ரங்கராஜ் இயக்கத்தில் வெளியான கட்ஸ் திரைப்படம் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் நாளை காணலாம்.

சுரபில் சுந்தர ஸ்வப்னம்

டோனி மேத்யூ இயக்கத்தில் வெளியான சுரபில் சுந்தர ஸ்வப்னம் திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நாளை பார்க்கலாம். இப்படத்தில் சோனி சோஜன், குங்பூ சஞ்சு, ஸ்டெபின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சக்ரவ்யூஹம்: தி ட்ராப்

இயக்குநர் சேத்குரி மதுசூதனன் இயக்கத்தில் கிரைம், த்ரில்லர் படமாக வெளியான சக்ரவ்யூஹம்: தி ட்ராப் திரைப்படம் நாளை ஆஹா ஓடிடியில் வெளியாகிறது.

ஜின் தி பெட்

முகின் ராவ் நடிப்பில் தமிழில் வெளியான ஜின் தி பெட் திரைப்படம் தெலுங்கு மொழியில் நாளை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்

கடந்த வாரம் வெளியான படை தலைவன் திரைப்படத்தை ஆஹா தமிழிலும் ரோந்த் திரைப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டாரிலும் மார்கன் திரைப்படத்தை அமேசான் பிரைமிலும் காணக் கிடைக்கின்றன.

பறந்து போ படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

பறந்து போ படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிகர்கள் சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, மிதுல் ரியான் நடிப்பில் வெளியான ‘பறந்து போ’ திரைப்படம... மேலும் பார்க்க

தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ்! தனுஷுக்கு நன்றி!

2023 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. இவற்றில் சிறந்த இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் (வாத்தி படத்துக்காக) விருது பெற்றுள்ளார்.இரண்டாவது முறையாக தேசிய விருத... மேலும் பார்க்க

தி கேரளா ஸ்டோரி படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிப்பு

கேரளத்தில் கடும் எதிா்ப்பு எழுந்ததி கேரளா ஸ்டோரி படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த இயக்குநர் சுதிப்தோ சென் மற்றும் சிறந்த ஒளிப்பதிவு பிரசந்தனு மொஹபத்ரா ஆகிய பிரிவுகளில் விருதுகள... மேலும் பார்க்க

முதல்முறையாக தேசிய விருது: சிறந்த நடிகையாக ராணி முகர்ஜி!

சிறந்த நடிகைக்கான தேசிய விருது பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி தேர்வாகியுள்ளார். மத்திய அரசு வழங்கும் 71-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இந்தமுறை 2023 படங்களுக்கு விருதுகள் அளிக்கப்பட்டு... மேலும் பார்க்க

வாத்தி படத்துக்காக ஜி.வி. பிரகாஷுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது!

இந்தியாவின் 71-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழில் வாத்தி படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருது ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு 2022ஆம்... மேலும் பார்க்க