நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பிஎஸ்என்எல் கோபுரங்களை அதிகரிக்க வேண்டும்: சி...
இனப்பெருக்கத்திற்குப் பிறகு பெண் ஆக்டோபஸ்கள் இறந்துவிடுமா? - octopus குறித்த ஆச்சர்ய தகவல்கள்!
ஜுராசிக் காலத்தின் பிற்பகுதியில் இருந்து ஆக்டோபஸ்கள் பூமியில் வாழ்ந்து வருகின்றன. கடலின் ஆழத்தில் உள்ள பவளப்பாறைகளில் வாழ்ந்து வருகின்றன.
ஆழ்கடலில் இருக்கும் ஆக்டோபஸ்கள் குறித்த ஆச்சர்ய தகவல்களை தெரிந்துகொள்வோம்.
ஆக்டோபஸ் முதுகெலும்பில்லாத உயிரினங்களில் ஒன்றாக அறியப்படுகிறது. ஆக்டோபஸின் ரத்தம் நீல நிறத்தில் இருக்குமாம்.
இந்த உயிரினங்கள் தங்கள் உடல் முழுவதும் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல தாமிரம் கொண்ட ஹீமோசயனின் புரதத்தை நம்பியிருப்பதால் நீல ரத்தத்தைக் கொண்டுள்ளன.
ரத்தத்தில் உள்ள ஹீமோசயனின் உண்மையில் நிறமற்றது தான், என்றாலும் அதில் தாமிரம் இருப்பதால், அது ஆக்ஸிஜனுடன் பிணைக்கும்போது நீல நிறமாக மாறும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

ஆக்டோபஸ்களில் மூன்று இதயங்கள் காணப்படுகின்றன. இரண்டு செவுள்களுக்கு ரத்தத்தை செலுத்துகின்றன, மூன்றாவது இதயம் உடல் முழுவதும் ரத்தத்தை எடுத்துச்செல்கிறது.
நீந்தும்போது அவற்றின் முக்கிய இதயம் துடிப்பதை நிறுத்துகிறது, அதனால் தான் அவை அடிக்கடி ஊர்ந்து செல்லுமாம்.
ஆக்டோபஸ்கள் புத்திசாலித்தன திறனுக்காக பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் ஆக்டோபஸ்களால் தனிப்பட்ட மனிதர்களைக்கூட அடையாளம் காண முடியுமாம்.

மேலும் ஆச்சர்யமான தகவல் என்னவென்றால், இனச்சேர்க்கைக்குப் பிறகு பெண் ஆக்டோபஸ்கள் இறப்பதுதான்! பெண் ஆக்டோபஸ்கள் இனச்சேர்க்கைக்குப் பிறகு தங்கள் முட்டைகளைப் பாதுகாப்பதில் தங்கள் கடைசி நாள்களைக் கழிக்கின்றன, அதன் பின்னர் இறந்துவிடுமாம்.
பெண் ஆக்டோபஸ்கள் முட்டையிட்ட பிறகு ஹார்மோன் அளவுகளில் ஏற்படும் கடுமையான மாற்றம், அவை தங்களைத் தாங்களே சிதைத்துக் கொண்டு இறக்கச் செய்கிறது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
முட்டைகளை இட்ட பிறகு, தாய் ஆக்டோபஸ்கள் சாப்பிடுவதை நிறுத்திவிடும் என்று சிகாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உட்பட பலர் விளக்குகின்றனர்.