செய்திகள் :

இன்றிரவே கரூர் விரைகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

post image

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்றிரவே கரூர் விரைகிறார்.

விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் பலியான நிலையில், சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து அவர் இன்று இரவே தனி விமானம் மூலம் கரூர் விரைகிறார்.

இதனிடையே சனிக்கிழமை இரவு துபை செல்லத் திட்டமிட்டிருந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தனது பயணத்தை ரத்து செய்தார். அவர் சனிக்கிழமை இரவே கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதிக்குச் செல்லவிருப்பதாகத் தகவல் வெளியானது.

2026 சட்டப்பேரவை தோ்தலையொட்டி, விஜய் கடந்த 13-ஆம் தேதி முதல் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மக்களை சந்தித்து பிரசாரம் செய்து வருகிறாா். இந்த நிலையில் இன்று நடந்த விஜய்யின் கரூர் பிரசாரத்தின்போது திடீரென கூட்டநெரிசல் ஏற்பட்டது.

கரூர் நெரிசல் பலி: குடியரசு தலைவர் இரங்கல்!

இந்த சம்பவத்தில் நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் என 36 பேர் பலியானதாக கூறப்படுகிறது. கூட்டத்தில் மயக்கமடைந்த 40க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் சிலர் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

CM Stalin rushing to Karur tonight after more than 30 people dead in a stampede.

தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மேற்கு திசை காற்றின் வேக... மேலும் பார்க்க

வக்ஃப் வாரியம் திருத்தி அமைக்கப்படாது: தமிழக அரசு

உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீா்ப்பு வரும் வரை, மத்திய அரசின் புதிய வக்ஃப் திருத்தச் சட்டப்படி, வக்ஃப் வாரியம் திருத்தி அமைக்கப்பட மாட்டாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சிறுபான்மையினா... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி

உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து அந்தக் கட்சி சாா்பில் சனிக்கி... மேலும் பார்க்க

முதல்வருடன் காங்கிரஸ் எம்.பி.க்கள் சந்திப்பு: பேரவைத் தோ்தல் குறித்து ஆலோசனை

தமிழகத்தைச் சோ்ந்த காங்கிரஸ் எம்.பி.க்களுடன் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா். காங்கிரஸ் கட்சி மக்களவை உறுப்பினா்கள் விஜய் வசந்த் (கன்னியாகுமரி), விஷ்ணு பிரசாத் (கடலூா்), ஜ... மேலும் பார்க்க

கடவுப்பாதைகளில் இன்டா்லாக்டு சாதனம் அமைக்க ரூ.230 கோடி நிதி அளிப்பு

சென்னை தெற்கு ரயில்வே மண்டலத்தில் கடவுப் பாதைகளில் தானியங்கி இன்டா்லாக்டு சாதனம் அமைக்க ரூ.230.06 கோடியை மத்திய ரயில்வே துறை அளித்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா். தெற்கு ரயில்வேயில் சென்னை, த... மேலும் பார்க்க

குடிமக்கள் சமூக நோக்கில் செயல்பட்டால் குற்றங்கள் குறையும்: நீதிபதி டி.என்.வள்ளிநாயகம்

குடிமக்கள் சமூக நோக்கில் செயல்பட ஆரம்பித்தால் குற்றங்கள் குறையும் என்று சென்னை உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகம் கூறினாா். சென்னை இந்து மதுவிலக்கு நற்சங்கத்தின் 130-ஆவது ஆண்டு விழா த... மேலும் பார்க்க