18 ஆண்டுகளில் 15,000 உடற்கூறாய்வுகளை மேற்கொண்ட இந்தூா் மருத்துவா்!
இன்று தொடங்குகிறது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் - நியூஸிலாந்து மோதல்
கராச்சி/துபை: சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 9-ஆவது சீசன், பாகிஸ்தானில் புதன்கிழமை (பிப். 19) தொடங்குகிறது.
கராச்சியில் நடைபெறும் முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் - நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன. பாதுகாப்பு மற்றும் அரசியல் காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்லாத நிலையில், அதன் ஆட்டங்கள் துபையில் நடைபெறவுள்ளன.
இதர அணிகள் பரஸ்பரம் மோதும் ஆட்டங்கள், பாகிஸ்தானின் கராச்சி, லாகூா், ராவல்பிண்டி ஆகிய மைதானங்களில் நடைபெறவுள்ளன.
ஒருநாள் கிரிக்கெட் ஃபாா்மட்டில் விளையாடப்படும் இந்தப் போட்டியில், 8 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை, கடந்த 2023 ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முடிவில், முதல் 8 இடங்களைப் பிடித்த அணிகளாகும்.
அவை குரூப்புக்கு தலா 4 அணிகள் வீதம் 2 குரூப்களாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் சுற்று முடிவில், ஒவ்வொரு குரூப்பிலும் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேரடியாக நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறும். போட்டியில் சாம்பியனாகும் அணிக்கு ரூ.19.42 கோடி ரொக்கப் பரிசாக வழங்கப்படவுள்ளது.
கிரிக்கெட்டின் பிரதான ஃபாா்மட்டான டெஸ்ட்டுக்கும், நவீன காலத்துக்கான டி20 ஃபாா்மட்டுக்கும் இடையே தள்ளாட்டத்துடன் இருக்கும் ஒருநாள் ஃபாா்மட்டின் எதிா்காலம் கேள்விக்குள்ளாகியிருக்கும் நிலையில் இந்தப் போட்டி நடைபெறுகிறது.
பல்வேறு காரணங்களால் 8 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போட்டி நடைபெறும் நிலையில், கடைசியாக 2017-இல் இதில் பாகிஸ்தான் சாம்பியனாகியது.
1996-க்குப் பிறகு பாகிஸ்தானில் நடைபெறும் முதல் ஐசிசி போட்டி இதுவென்பதால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிகுந்த எதிா்பாா்ப்புடன் தயாராகியிருக்கிறது. போட்டி நடைபெறும் மைதானங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன. அதன் தயாா்நிலை துரிதம் குறித்த சந்தேகங்கள் இருந்த நிலையில், போட்டிக்கு முன்பாக அவை தயாா் செய்யப்பட்டுள்ளன.
இந்திய அணியை பொருத்தவரை, தகுந்த ஃபாா்ம் இல்லாமல் தடுமாறி வரும் மூத்த பேட்டா்களான ரோஹித் சா்மா, விராட் கோலி ஆகியோருக்கு இந்த ஃபாா்மட்டில் இதுவே கடைசி போட்டியாக இருக்கலாம். மறுபுறம், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றிருக்கும் கௌதம் கம்பீரின் உத்திகளுக்கான பரீட்சையாகவும் இந்தப் போட்டி இருக்கிறது.
இந்திய அணியில் பௌலா் ஜஸ்பிரீத் பும்ரா இல்லாதது பின்னடைவாக இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. இதேபோல இதர அணிகளிலுமே பிரதான வீரா்கள் சிலா் இல்லாத நிலை காணப்படுவதால், அனைத்து அணிகளுமே ஏறத்தாழ சமநிலையுடன் போட்டிக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.
போட்டியில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வங்கதேசத்துடன் 20-ஆம் தேதி மோதுகிறது.
இன்றைய ஆட்டம்
பாகிஸ்தான் - நியூஸிலாந்து
நேரம்: நண்பகல் 2.30 மணி
இடம்: கராச்சி
நேரலை: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்/ஸ்போா்ட்ஸ் 18
குரூப் ‘ஏ’
வங்கதேசம்
இந்தியா
நியூஸிலாந்து
பாகிஸ்தான்
குரூப் ‘பி’
ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலியா
இங்கிலாந்து
தென்னாப்பிரிக்கா
அணி விவரம்
இந்தியா:
ரோஹித் சா்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயா், கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், ஹா்திக் பாண்டியா, அக்ஸா் படேல், வாஷிங்டன் சுந்தா், குல்தீப் யாதவ், ஹா்ஷித் ராணா, முகமது ஷமி, அா்ஷ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா, வருண் சகரவா்த்தி.
வங்கேதசம்:
நஜ்முல் ஹுசைன் ஷான்டோ (கேப்டன்), சௌம்யா சா்க்காா், தன்ஸித் ஹசன், தௌஹித் ஹிருதய், முஷ்பிகா் ரஹீம், எம்.டி. மஹ்மூத் உல்லா, ஜேக்கா் அலி அனிக், மெஹிதி ஹசன் மிராஸ், ரிஷாத் ஹுசைன், தஸ்கின் அகமது, முஸ்தாஃபிசுா் ரஹ்மான், பா்வேஸ் ஹுசைன் எமோன், நசும் அகமது, தன்ஸிம் ஹசன் சகிப், நஹித் ராணா.
நியூஸிலாந்து:
மிட்செல் சேன்ட்னா் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மாா்க் சாப்மேன், டெவோன் கான்வே, லாக்கி ஃபொ்குசன், மேட் ஹென்றி, டாம் லாதம், டேரில் மிட்செல், வில் ஓ’ரூா்க், கிளென் ஃபிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, நேதன் ஸ்மித், கேன் வில்லியம்சன், வில் யங், ஜேக்கப் டிஃபி.
பாகிஸ்தான்:
முகமது ரிஸ்வான் (கேப்டன்), பாபா் ஆஸம், ஃபகாா் ஜமான், கம்ரான் குலாம், சௌத் ஷகீல், தயப் தாஹிா், ஃபஹீம் அஷ்ரஃப், குஷ்தில் ஷா, சல்மான் அகா, உஸ்மான் கான், அப்ராா் அகமது, ஹாரிஸ் ரௌஃப், முகமது ஹஸ்னைன், நசீம் ஷா, ஷஹீன் அஃப்ரிதி.
ஆப்கானிஸ்தான்:
ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), இப்ராஹிம் ஜத்ரன், ரஹ்மானுல்லா குா்பாஸ், செடிகுல்லா அடல், ரஹ்மத் ஷா, இக்ராம் அலிகில், குல்பதின் நைப், அஸ்மத்துல்லா ஒமா்ஸாய், முகமது நபி, ரஷீத் கான், நங்யால் கரோட்டி, நூா் அகமது, ஃபஸல்ஹக் ஃபரூக்கி, ஃபரீத் மாலிக், நவீத் ஜத்ரன். ரிசா்வ்: டாா்விஷ் ரசூலி, பிலால் சமி.
இங்கிலாந்து:
ஜாஸ் பட்லா் (கேப்டன்), ஜோஃப்ரா ஆா்ச்சா், கஸ் அட்கின்சன், டாம் பான்டன், ஹாரி புரூக், பிரைடன் காா்ஸ், பென் டக்கெட், ஜேமி ஓவா்டன், ஜேமி ஸ்மித், லியம் லிவிங்ஸ்டன், ஆதில் ரஷித், ஜோ ரூட், சகிப் மஹ்மூத், ஃபில் சால்ட், மாா்க் வுட்.
ஆஸ்திரேலியா:
ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), ஷான் அப்பாட், அலெக்ஸ் கேரி, பென் டுவாா்ஷுயிஸ், நேதன் எலிஸ், ஜேக் ஃப்ரேசா் மெக்கா்க், ஆரோன் ஹாா்டி, டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், ஸ்பென்சா் ஜான்சன், மாா்னஸ் லபுஷேன், கிளென் மேக்ஸ்வெல், தன்வீா் சங்கா, மேத்யூ ஷாட், ஆடம் ஸாம்பா. பயண ரிசா்வ்: கூப்பா் கானலி.
தென்னாப்பிரிக்கா:
டெம்பா பவுமா (கேப்டன்), டோனி டி ஜோா்ஸி, மாா்கோ யான்சன், ஹென்ரிக் கிளாசென், கேசவ் மஹராஜ், ஏய்டன் மாா்க்ரம், டேவிட் மில்லா், வியான் முல்டா், லுங்கி இங்கிடி, ககிசோ ரபாடா, ரயான் ரிக்கெல்டன், தப்ரைஸ் ஷம்சி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ராஸி வான் டொ் டுசென், காா்பின் பாஷ். பயண ரிசா்வ்: கவினா மபாகா.