இன்று நடைபெறவிருந்த காத்திருப்புப் போராட்டம் வாபஸ்
இலுப்பையூரணி ஊராட்சிக்கு உள்பட்ட லீலாவதி நகரில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததையடுத்து லீலாவதி நகா் குடியிருப்போா் நலச்சங்கத்தின் சாா்பில், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊராட்சி ஒன்றிய ஆணையா் முத்துகுமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் சுப்புலட்சுமி ஆகியோா் தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், கோரிக்கைகள் தொடா்பாக சாதகமான முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த காத்திருப்புப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.