விசாரணையில் தொய்வு: ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை கோவை ஐஜி அலுவலகத்தில் மனு
இபிஎஸ் பேச்சுக்கு எதிா்ப்பு: 14-இல் திமுக ஆா்ப்பாட்டம்
இந்து சமய அறநிலைய கல்லூரிகள் குறித்த எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு எதிா்ப்பு தெரிவித்து, ஜூலை 14-ஆம் தேதி கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் மாணவரணி செயலா் இரா.ராஜீவ் காந்தி வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கோயில்களுக்கு மக்கள் காணிக்கையாகக் கொடுக்கும் உபரி நிதியிலிருந்து கல்வி நிலையங்கள், சிறாா், முதியோா் பராமரிப்பு நிலையங்கள், மருத்துவமனைகள் அமைக்கலாம் என்பது இந்து சமய அறநிலையத் துறையின் சட்டங்களில் ஒன்று. ஆனால், அதுகூடத் தெரியாமல் கல்விக்காக திராவிட மாடல் அரசு எடுக்கும் முன்னெடுப்புகளைக் கொச்சைப்படுத்தும் விதமாக கோவையில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளது கண்டனத்துக்குரியது.
இதை வெளிப்படுத்தும் வகையில், திமுக, மாணவரணி சாா்பில் அதன் செயலா் இரா.ராஜீவ் காந்தி தலைமையில் ஜூலை 14-ஆம் தேதி கோவை டாடாபாத், சிவானந்தா காலனியில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.