நேபாள பயணத்தை கூடுதல் கட்டணமின்றி மாற்றியமைத்துக்கொள்ளலாம்: ஏர் இந்தியா எக்ஸ்பிர...
இமானுவேல் சேகரன் நினைவு தினம்: டாஸ்மாக் கடைகள் அடைப்பு
இமானுவேல் சேகரன் நினைவு நாளை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற 10,11 ஆகிய இரண்டு நாள்கள் அரசு மதுபானக் கடைகள் அடைக்கப்படும் என ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தாா்.
இதுகுறித்து திங்கள்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், நகா் பகுதிகளில் வருகிற 11-ஆம் தேதி இமானுவேல் சேகரன் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இதை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு மதுபானக் கடைகள், அவற்றுடன் இணைந்த மதுபானக் கூடங்கள், தனியாா் மது விற்பனை நிலையங்கள் ஆகியவை வருகிற 10,11 ஆகிய இரண்டு நாள்கள் அடைக்கப்படும்.
இந்த இரண்டு நாள்களில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.