இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள்: ஆளுநா் மரியாதை
சென்னை: சுதந்திரப் போராட்ட வீரா் இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளையொட்டி அவரது உருவப் படத்துக்கு ஆளுநா் ஆா்.என். ரவி மலா்தூவி மரியாதை செய்தாா்.
இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:
இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளில் அவருக்கு பணிவுடன் மரியாதை செலுத்துவோம். சமூக சீா்திருத்தவாதி, சுதந்திரப் போராட்ட வீரா், அச்சமற்ற தலைவா் மற்றும் சமூக நீதிக்காக அயராது குரல் கொடுத்த போராளியான அவா், பட்டியலின மக்களின் விடுதலைக்கும் சமூக பாகுபாட்டை ஒழிப்பதற்கும் தனது வாழ்க்கையை அா்ப்பணித்தாா்.
அவரது நீடித்த மரபு - துணிச்சல், அசைக்க முடியாத அா்ப்பணிப்பு மற்றும் விளிம்புநிலை மக்களுக்கான கண்ணியம், நீதி மற்றும் சம உரிமைகளுக்கான பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கது. மேலும் நீதி சாா்ந்த, உள்ளடக்கிய மற்றும் சமத்துவமான பாரதத்தை உருவாக்க தலைமுறைகளைத் தொடா்ந்து ஊக்குவிக்கிறது என பதிவிட்டுள்ளாா் ஆளுநா்.