செய்திகள் :

இராக்கின் மற்றொரு எண்ணெய் வயல் மீது தாக்குதல்! ட்ரோன்களை இயக்கும் மர்ம நபர்கள் யார்?

post image

இராக் நாட்டிலுள்ள மற்றொரு எண்ணெய் வயலின் மீது ட்ரோன்கள் மூலம் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இராக்கின் பல்வேறு மாகாணங்களிலுள்ள எண்ணெய் வயல்களின் மீது கடந்த சில நாள்களாக தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இத்தகையச் சூழலில், அரை தன்னாட்சி பெற்ற அந்நாட்டின் குர்தீஷ் மாகாணத்திலுள்ள, எண்ணெய் வயல்களின் மீது இன்று (ஜூலை 16) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்களுக்கு, எந்தவொரு அமைப்பும் தற்போது வரை பெறுப்பேற்காத நிலையில், இராக்கின் மத்திய அரசுக்கும், குர்தீஷ் மாகாண அரசுக்கும் இடையிலான உறவு மேலும் விரிசலடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, குர்தீஷ் மாகாண பயங்கரவாதத் தடுப்புப் படையினர் கூறுகையில், ஸாகோ மாவட்டத்திலுள்ள எண்ணெய் வயலின் மீது 2 ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில், காலை முதல் அங்கு 3 வெடிப்புச் சம்பவங்கள் நடைபெற்றதால், அந்த எண்ணெய் வயல்களை நிர்வாகித்து வரும் நார்வே நாட்டைச் சேர்ந்த நிறுவனம் அதன் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

இருப்பினும், நல்வாய்ப்பாக இந்தச் சம்பவத்தில் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால், அங்குள்ள கட்டமைப்புகள் பலத்த சேதமடைந்துள்ள நிலையில், அதிகாரிகள் சேதாரங்களை மதிப்பீடு செய்து வருகின்றனர்.

முன்னதாக, தோஹுக் மாகாணத்தில், அமெரிக்க நிறுவனம் நிர்வாகித்து வந்த எண்ணெய் வயல்களின் மீது நேற்று (ஜூலை 15) ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல்களில், அங்கு தீ பரவி பலத்த சேதாரங்களை உண்டாக்கியது.

இந்நிலையில், இந்த ட்ரோன் தாக்குதல்கள் அனைத்தும், ஈரானின் ஆதரவுப் பெற்று, இராக் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் கிளர்ச்சிப்படைகள்தான் காரணம் என குர்தீஷ் அரசு குற்றம்சாட்டியுள்ளது.

குர்தீஷ் மாகாணத்தின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் நோக்கத்திலேயே இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் நடத்தப்படுவதாக, அம்மாகாணத்தின் இயற்கை வளத் துறை அமைச்சர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பாகிஸ்தானை புரட்டிப் போடும் கனமழையால் திடீர் வெள்ளம்! 116 பேர் பலி!

Drone attacks by unidentified assailants on another oil field in Iraq have reportedly caused significant damage to the infrastructure there.

ரஷியா-இந்தியா-சீனா ஒத்துழைப்பை மீட்கும் ரஷிய முயற்சிகளுக்கு சீனா ஆதரவு

ரஷியா-இந்தியா-சீனா (ஆா்ஐசி) முத்தரப்பு ஒத்துழைப்பை மீட்டெடுக்க ரஷியா எடுத்துள்ள முன்னெடுப்புக்கு ஆதரவு தெரிவித்த சீனா, ‘இந்த ஒத்துழைப்பு 3 நாடுகளின் சொந்த நலன்களுக்கு மட்டுமல்லாமல், பிராந்திய மற்றும்... மேலும் பார்க்க

அமெரிக்காவில் குடும்பத்தினருடன் இணைந்த சுக்லா!

‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின்கீழ் சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்று வெற்றிகரமாக மீண்டும் பூமிக்குத் திரும்பியுள்ள இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவில் மனைவி, மகனுடன் இணைந்தாா். இதனிடைய... மேலும் பார்க்க

பருவமழை: பாகிஸ்தானில் அவசரநிலை அறிவிப்பு

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தொடா் பருவமழையால் 30 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மாகாண அரசு பல்வேறு பகுதிகளில் அவசரநிலையை அறிவித்துள்ளது. மேலும், இந்தப் பேரிடரில் ஒட்டுமொத்த... மேலும் பார்க்க

இலங்கை: புதைகுழியில் 65 சிறுமிகளின் எலும்புகள்

இலங்கையின் செம்மணி பகுதியிலுள்ள புதைகுழியில் இருந்து 4 முதல் 5 வயதிலான 65 சிறுமிகளின் எலும்புக் கூடுதல் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன. பள்ளிப் பைகள், பொம்மைகளுடன் அந்த எலும்புக்கூடுகள் புதையுண்டிருந்ததாக ... மேலும் பார்க்க

எரிசக்திக்கே முன்னுரிமை..! நேட்டோவின் எச்சரிக்கையை நிராகரித்த இந்தியா!

ரஷியாவுடன் வர்த்தகம் செய்தால் கடுமையான பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ளக்கூடும் என நேட்டோ பொதுச் செயலர் விடுத்த எச்சரிக்கையை இந்தியா நிராகரித்துள்ளது. மேலும், எரிசக்திக்கே முன்னுரிமை எனத் தெரிவித்துள்ளது... மேலும் பார்க்க

செனகலில் இருந்து பிரான்ஸ் படைகள் வெளியேற்றம்! ராணுவத் தளங்கள் அரசிடம் ஒப்படைப்பு!

ஆப்பிரிக்க நாடுகளில், பிரான்ஸின் செல்வாக்குக் குறைந்து வரும் சூழலில், அதன் கடைசி மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலில் இருந்து பிரன்ஸ் படைகள் முற்றிலும் வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஆப்பிரிக்காவி... மேலும் பார்க்க