இரிடியம் தருவதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டிய காவல் உதவி ஆய்வாளர் உள்பட 6 பேர் கைது
கரூர்: இரிடியம் தருவதாகக் கூறி கரூரில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டிய மதுரை காவல் உதவி ஆய்வாளர் உள்பட 6 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கரூர் தெற்கு காந்திகிராமத்தை சேர்ந்தவர் தியாகு (எ) தியாகராஜன்(42). வியாழக்கிழமை காலை தியாகராஜனை சந்தித்த அவரது நண்பர்களான காந்திகிராமம் கம்பன் தெற்குத் தெருவைச் சேர்ந்த பொன்னரசன்(38), தாந்தோணிமலை அசோக்நகரைச் சேர்ந்த சுரேஷ் (41) ஆகியோர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த அம்மாமுத்தம்பட்டியைச் சேர்ந்த சிவகுமார் என்பவரிடம் பல கோடி மதிப்புள்ள இரிடியம் இருக்கிறது, அதனை ரூ.15 லட்சத்திற்கு நமக்குத் தருவதாகக் கூறுகிறார்கள். திண்டுக்கல் வந்தால் தருவதாக தெரிவித்துள்ளனர் என்றும், எனவே அதனை நாம் வாங்கி வந்து பல கோடிக்கு விற்பனை செய்யலாம் என தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து தியாகராஜன், பொன்னரசன், சுரேஷ் ஆகியோர் காரில் வியாழக்கிழமை பிற்பகல் திண்டுக்கல் சென்றுள்ளனர். அங்குள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த சிவக்குமாரிடம் பொன்னரசன், சுரேஷ், தியாகராஜன் ஆகியோர் பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது காரில் வந்த ஒரு கும்பல் திடீரென தியாகராஜன், பொன்னரசன் ஆகியோரை காரில் கடத்திச் சென்றுள்ளனர். இந்த கும்பல் மதுரை கோச்சடை பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் நின்றுகொண்டு, தியாகராஜனின் உறவினர் கரூர் மாவட்டம் சிந்தாமணிப்பட்டி அடுத்த வரவணையைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் அஜித்(29) என்பவருக்கு போன் செய்து, உன் உறவினர் தியாகராஜனை நாங்கள் கடத்தி வைத்துள்ளோம், ரூ.15 லட்சம் கொடுத்தால்தான் அவரை உயிரோடு விடுவோம் என கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ந்துபோன அஜித் தன்னிடம் ரூ.50,000 மட்டுமே உள்ளது, மீதம் உள்ள பணத்தை தியாகராஜனை என்னிடம் ஒப்படைக்கும் போது தருகிறேன் எனக்கூறியுள்ளார். இதற்கு சம்மதித்த அந்த கும்பல் உடனே பணத்தை அனுப்புமாறு கூறியதுடன் ரூ.50 ஆயிரத்தை சிவக்குமாரின் போன் பே எண்ணிற்கு அனுப்பியுள்ளார்.
இதையடுத்து அந்த கும்பல் உடனே மீதம் உள்ள பணத்தையும் அனுப்பு, இல்லையென்றால் தியாகராஜனின் தலை இருக்காது என மிரட்டியுள்ளனர். இதையடுத்து அஜித் உடனே தியாகராஜனின் நண்பரான சுரேஷ்குமாரிடம் மிரட்டல் கும்பல் குறித்து கூறியுள்ளனர். அதற்கு சுரேஷ்குமார் இரிடியம் இருப்பதாக சிவக்குமார் என்பவர் எங்களை திண்டுக்கல் வரவழைத்து தியாகராஜனையும் பொன்னரசனையும் கடத்திச் சென்றுவிட்ட சம்பவம் குறித்து தெரிவித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து மாலையில் கரூர் வந்த அஜித், சுரேஷ் ஆகியோர், தியாகராஜன், பொன்னரசன் ஆகியோர் கடத்தப்பட்டது குறித்து போலீஸில் புகார் அளித்தனர்.
ரசனையும் காரில் கடத்திச் சென்றிருப்பது தெரியவந்து.
இதையடுத்து கடத்தல் கும்பலிடம் இருந்து கார், போலீஸ் லத்தி, 2 அரிவாள், இரும்புராடு, காவலர் அடையாள அட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து உதவி காவல் ஆய்வாளர் கருப்பசாமி உள்பட 6 பேரையும் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1 இல் நீதிபதி பரத்குமார் முன்னிலையில் வெள்ளிக்கிழமை காலை ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
அரசுப் பள்ளிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ்! - பள்ளிக்கல்வித் துறையின் முக்கிய அறிவிப்புகள்!!
இந்த புகாரின் பேரில் கடத்தல் கும்பலை பிடிக்க கரூர் நகர துணைக் காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ், பசுபதிபாளையம் காவல் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையில் போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீஸார் போனில் பேசிய மர்ம கும்பலின் போனை ஆய்வு செய்ததில் மர்ம கும்பல் மதுரை கோச்சடையில் இருப்பதை உறுதி செய்து அங்கு நின்றிருந்த கும்பலை பிடித்து கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் சிவக்குமார் வாட்ஸ்ஆப்பில் பொன்னரசனுக்கு இரிடியம் இருப்பதாக பொய்யான தகவல் தெரிவித்து, அவர்களை திண்டுக்கல் வரச் செய்து பணத்தை பறிக்கும் நோக்கத்தில் அவரது நண்பர்களான மதுரை மாவட்டம் விளாங்குடி விசித்ரா விஸ்தார் அபார்ட்மெண்டைச் சேர்ந்த கண்ணன்(42), தோடனேரி மேலத்தெருவைச் சேர்ந்த முத்துப்பாண்டி(50), குமார்(46), சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அண்ணாசாலையைச் சேர்ந்த ரவிக்குமார்(42), மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த அம்மாமுத்தம்பட்டியைச் சேர்ந்த சிவகுமார்(38), மதுரையில் தமிழ்நாடு சிறப்பு காவல்படையின் 6 ஆவது பட்டாலியனில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றும் மதுரை ஆத்திக்குளத்தைச் சேர்ந்த கருப்பசாமி(50) ஆகியோருடன் சேர்ந்து தியாகராஜனையும், பொன்ன