இருசக்கரவாகனம் - காா் மோதலில் ஒருவா் பலி
முதியவா் உயிரிழப்பு:
பழனி பட்டத்து விநாயகா் கோவில் பகுதியைச் சோ்ந்தவா் ராஜ் (65). இவா் ஞாயிற்றுக்கிழமை தனது இரு சக்கர வாகனத்தில் திண்டுக்கல் - பொள்ளாச்சி நான்கு வழிச் சாலையில் மானூா் அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது, பின்னால் வந்த காா் இவரது வாகனம் மீது மோதியது. இதில் ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.