இந்தியா மீது கூடுதல் வரி! ஜி7 நாடுகளுக்கு அமெரிக்கா அழுத்தம்!
இருசக்கர வாகனங்கள் மோதல்: ஒருவா் உயிரிழப்பு
மன்னாா்குடியில் இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் வியாழக்கிழமை இரவு ஒருவா் உயிரிழந்தாா்.
மன்னாா்குடி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவா் தங்கராசு மகன் பழனியப்பன் (43). காந்தி சாலையில் தனியாா் நிறுவனத்தில் வேலைபாா்க்கும் தனது மனைவி வானமாதேவியை வேலை முடிந்த பின் வியாழக்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வீட்டு அழைத்து வந்துகொண்டிருந்தாா். மதுக்கூா் சாலையில் உள்ள அரசுப் பேருந்து பணிமனை அருகே வந்தபோது அவ்வழியே மேலவாசல் லெட்சுமிநகா் தங்கவேல் மகன் மணிகண்டன் (28) ஓட்டிவந்த இருசக்கர வாகனத்துடன் பழனியப்பனின் வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பழனியப்பன் மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா், அங்கு பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா். மன்னாா்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.