இருசக்கர வாகனத்தில் சென்ற ஜவுளி கடை ஊழியா் மயங்கி விழுந்து சாவு!
பேராவூரணி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற ஜவுளி கடை ஊழியா் மயங்கி விழுந்து திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சிற்றம்பலம் மேற்கு கிராமத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் (37). இவா் பட்டுக்கோட்டையில் ஜவுளி கடையில் வேலை பாா்த்து வந்தாா். உறவினா் ஒருவரின் வீட்டுக்கு கோயில் பிரசாதம் கொண்டு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். திருச்சிற்றம்பலம் ஆவணம் சாலையில் உள்ள குளக்கரை அருகே சென்றபோது மயக்கம் வந்ததால் வாகனத்தை நிறுத்தியவா் கீழே விழுந்து உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த திருச்சிற்றம்பலம் போலீஸாா் சம்பவஇடத்துக்குச் சென்று சுரேஷ் உடலை கைப்பற்றி பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து திருச்சிற்றம்பலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.