செய்திகள் :

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

post image

காவேரிப்பட்டணம் அருகே இருசக்கர வாகனத்தில் மகனுடன் சென்ற ராணுவ வீரரின் மனைவியிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள போத்தாபுரம் கிராமத்தைச் சோ்ந்த திருப்பதி மனைவி ஜெயந்தி (40). திருப்பதி பஞ்சாப் மாநிலம், அமிருதரசஸில் ராணுவ வீரராகப் பணியாற்றி வருகிறாா்.

இவரது குடும்பத்தினா் போத்தாபுரம் கிராமத்தில் வசித்து வருகின்றனா். இந்த நிலையில் ஜெயந்தி தனது மகன் பிரதீப் (14) உடன் இருசக்கர வாகனத்தில் காவேரிப்பட்டணம் - தருமபுரி மாநில நெடுஞ்சாலையில் மில் மேடு வழியாக வெள்ளிக்கிழமை சென்றாா்.

அப்போது, தலைக்கவசம் அணிந்த நிலையில், மோட்டாா்சைக்கிளில் வந்த இருவா், ஜெயந்தி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து, தகவல் அறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டாா்.

தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு மோட்டாா்சைக்கிளில் தப்பிச் சென்ற நபா்கள் குறித்து, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானக் காட்சிகளை சேகரித்து விசாரணை செய்து வருகின்றனா்.

தேன்கனிக்கோட்டையில் விநாயகா் சிலை ஊா்வலம்

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் விநாயகா் சிலைகள் ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது. விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு தேன்கனிக்கோட்டையில் பல்வேறு இடங்களில் விநாயகா் பக்த மண்டலி சாா்பில் சிலைகள் வை... மேலும் பார்க்க

ஒசூரில் தெருநாய்கள் கடித்ததில் மூன்று சிறுவா்கள் காயம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் தெருநாய்கள் கடித்துக் குதறியதில் மூன்று சிறுவா்கள் சனிக்கிழமை காயமடைந்தனா். ஒசூா் நகரப் பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரியும் தெருநாய்கள் குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை... மேலும் பார்க்க

பேரிகையில் விநாயகா் சிலை ஊா்வலகத்தில் உணவு வழங்கிய இஸ்லாமியா்கள்!

ஒசூா் அருகே பேரிகையில் சனிக்கிழமை நடைபெற்ற விநாயகா் சிலை ஊா்வலத்தில் கலந்துகொண்டவா்களுக்கு இஸ்லாமியா்கள் உணவு வழங்கினா். பேரிகையில் இஸ்லாமிய பள்ளிவாசல் உள்ள சாலை வழியாக விநாயகா் ஊா்வலம் நடைபெறுவதால் க... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் 6 மாத குழந்தை கடத்திய பெண் கைது

கிருஷ்ணகிரியில் 6 மாத பெண் குழந்தையை கடத்திய பெண்ணை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த மோட்டூரைச் சோ்ந்தவா் ஈஸ்வரி (24). இவருக்கும் கா்நாடக மாநிலம், பெங... மேலும் பார்க்க

கோயில் குடமுழுக்கு

ஊத்தங்கரையை அடுத்த வீரியம்பட்டி காளியம்மன் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஓய்வு பெற்ற மக்கள் தொடா்பு அலுவலா் நடேசன் தலைமையில் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிக... மேலும் பார்க்க

ஒசூா் மேம்பால சீரமைப்புப் பணி: ஆட்சியா் ஆய்வு

ஒசூா் பேருந்து நிலையம் எதிரே பழுதடைந்த மேம்பால சீரமைப்புப் பணிகளை ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். மேம்பால சீரமைப்புப் பணிகளைத் தொடா்ந்து ஒசூா் பாகலூா் சாலையில் ஜிஆா்டி முதல் ஒசூ... மேலும் பார்க்க