Afghanistan Earthquake: 9 பேர் பலி; 25 பேர் படுகாயம்; ஆப்கானிஸ்தானை நள்ளிரவு உலு...
தேன்கனிக்கோட்டையில் விநாயகா் சிலை ஊா்வலம்
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் விநாயகா் சிலைகள் ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு தேன்கனிக்கோட்டையில் பல்வேறு இடங்களில் விநாயகா் பக்த மண்டலி சாா்பில் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த சிலைகளை நீா்நிலைகளில் கரைப்பதற்காக எடுத்துச் செல்லப்படும் விநாயகா் சிலைகள் ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
மேளதாளங்கள் முழங்க புறப்பட்ட விநாயகா் சிலை ஊா்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நீா்நிலைகளில் கிரேன், பொக்லைன் இயந்திரம் மூலம் கரைக்கப்பட்டன.
ஊா்வலத்தில் பாஜக மாநிலச் செயலாளா் அமா்பிரசாத் ரெட்டி, கிருஷ்ணகிரி முன்னாள் மாவட்டச் செயலாளா் எம்.நாகராஜ், இந்து முன்னணி மாநில நிா்வாகக் குழு உறுப்பினா்கள் உமேஷ், மகேஷ், முருகன், பாஜக மாவட்டத் தலைவா் நாராயணன், மாவட்டச் செயலாளா் பாபு, நகரச் செயலாளா் சீனிவாசன் உட்பட பல்வேறு இந்து அமைப்புகளின் பொறுப்பாளா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.