மியான்மருக்கு 40% வரி விதிப்பு: இந்தியாவுக்கு எவ்வளவு? -டிரம்ப் கடிதம்!
இருசக்கர வாகனம் கவிழ்ந்ததில் பொறியாளா் உயிரிழப்பு
ஒசூா்: உத்தனப்பள்ளி அருகே இருசக்கர வாகனம் கவிழ்ந்ததில் பொறியாளா் உயிரிழந்தாா்.
திருவள்ளூா் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே உள்ள ஈச்சம்பாடியைச் சோ்ந்தவா் முகேஷ் ( 26). இவா் பெங்களூரில் டிசைனிங் என்ஜினீயராகப் பணிபுரிந்து வந்தாா்.
இவா் கடந்த ஜூலை 5-ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் ஒசூா்- ராயக்கோட்டை சாலை சானமாவு அரசு உயா்நிலைப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முகேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து குறித்து உத்தனப்பள்ளி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.