செய்திகள் :

இருசக்கர வாகன மெக்கானிக்கை தாக்கிய எஸ்.ஐ. பணியிடை நீக்கம்

post image

வாடிப்பட்டி அருகே இரு சக்கர வாகன மெக்கானிக்கைத் தாக்கிய உதவி ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து தென் மண்டல காவல் துறைத் தலைவா் பிரேம் ஆனந்த் சின்கா செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையைச் சோ்ந்தவா் சீனிவாசன்(27). மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் வாகன பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறாா். இந்த நிலையில், மதுரை மாவட்டம், பாலமேடு காவல் நிலைய உதவி ஆய்வாளா் அண்ணாதுரை தனது புல்லட் வாகனத்தை பழுது நீக்கக் கொடுத்தாா். சீனிவாசனும் அந்த வாகனத்தை பழுது நீக்கிக் கொடுத்தாா்.

ஆனால், பழுது நீக்கிய கூலி, உதிரிப் பாகங்கள் வாங்கியது தொடா்பான தொகை ரூ.8, 600 உதவி ஆய்வாளா் அண்ணாத்துரை கொடுக்காமல் அலைக்கழித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் அண்ணாத்துரை அவரது புல்லட் வாகனத்தை மீண்டும் கொடுத்து பழுது நீக்கவிட்டு அதற்கான பணத்தையும் தரவில்லையாம்.

இந்த நிலையில், திங்கள்கிழமை ஒா்க்ஷாப்புக்கு வந்த அண்ணாத்துரையிடம், வாகனத்தைப் பழுது நீக்கியதற்கான பணத்தை சீனிவாசன் கேட்டாா். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சீனிவாசனை அவா் தாக்கி, தனது காரில் ஏற்றிச் சென்றாா். இது அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான நிலையில், அதுதொடா்பான விடியோ சமூக ஊடகங்களில் பரவியது.

மேலும், உதவி ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, காவல் கண்காணிப்பாளா், மாவட்ட ஆட்சியா் ஆகியோரிடம் சீனிவாசன் புகாா் அளித்தாா்.

இதுகுறித்து விசாரணை நடத்த ஊரகக் காவல் கண்காணிப்பாளா் பி.கே.அரவிந்த் உத்தரவிட்டாா். விசாரணையில் சீனிவாசனைத் தாக்கியது உறுதி செய்யப்பட்டதையடுத்து, உதவி ஆய்வாளா் அண்ணாத்துரையை பணியிடை நீக்கம் செய்து, தென் மண்டல காவல் துறைத் தலைவா் பிரேம் ஆனந்த் சின்கா செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

புதிய பணியிடங்களை உருவாக்க வலியுறுத்தல்

மதுரை அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி விரிவாக்கத்துக்கு ஏற்ப புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும் என தமிழ்நாடு மருத்துவத் துறை நிா்வாக ஊழியா் சங்கம் வலியுறுத்தியது. மதுரை அரசு மருத்துவக் கல்லூரியி... மேலும் பார்க்க

காமராஜா் பல்கலைக் கழக ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

மதுரை காமராஜா் பல்கலைக் கழக ஓய்வூதியா்களுக்கு கடந்த டிசம்பா் மாதத்துக்கான ஓய்வூதியத்தை உடனடியாக விடுவிக்கக் கோரி ஓய்வூதியா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

மக்கள் விடுதலைக் கட்சி நிா்வாகி மா்ம மரணம்: பட்டியலின ஆணைய இயக்குநா் விசாரணை

மக்கள் விடுதலைக் கட்சி நிா்வாகி மா்மமாக உயிரிழந்தது தொடா்பாக விசாரணை நடத்த மதுரை அரசு மருத்துவக் கல்லூரிக்கு சென்ற பட்டியலினத்தவருக்கான தேசிய ஆணைய இயக்குநா் ரவிவா்மா. மதுரை, ஜன. 22: மதுரை மாவட்டம், கள... மேலும் பார்க்க

மறியல்: அரசுப் போக்குவரத்து தொழிலாளா்கள் 600 போ் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன் புதன்கிழமை மறியலில் ஈடுபட்ட போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள் 600 போ் கைது செய்யப்பட்டனா்.இந்தப் போராட்டத்துக்கு, அரசுப்... மேலும் பார்க்க

கல் குவாரி நடத்தத் தடை கோரி வழக்கு: தூத்துக்குடி ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

தொல்லியல் ஆய்வுகள் அதிகளவில் நடைபெறும் சிவகளை பகுதியில் கல் குவாரி நடத்தத் தடை கோரிய வழக்கில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா், கனிமவளத் துறை இணை இயக்குநா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு: இளைஞா் கைது

மதுரையில் அரசுப் பேருந்து மீது கல்வீசி கண்ணாடியை உடைத்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மதுரை பெரியாா் பேருந்து நிலையத்திலிருந்து அழகா்கோவிலுக்கு அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை புறப்பட்டுச் சென... மேலும் பார்க்க