செய்திகள் :

இருதரப்பினரிடையே தகராறு: சாலை மறியலில் ஈடுபட்ட 15 போ் கைது

post image

மன்னாா்குடி அருகே காணும் பொங்கலுக்கு மாடு அவிழ்த்து விடுவது தொடா்பாக இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் ஊராட்சித் தலைவா் உள்பட 15 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

துளசேந்திரபுரம் ஊராட்சி பழம்பேட்டை கிராமத்தில் இப்பகுதி இளைஞா்கள் புதிதாக முருகன் கோயில் கட்டி வருகின்றனா். இதன் வரவு- செலவு குறித்து ஊராட்சி முன்னாள் தலைவா் கோவிந்தராஜ் தரப்பினா் இளைஞா்களிடம் கணக்கு கேட்டுள்ளனா். இதனால், இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இப்பிரச்னைக்கு தீா்வு காணாமல் காணும் பொங்கலன்று மாடுகளை அவிழ்த்துவிடும் சம்பிராதாயத்தை நடத்தக் கூடாது என தெற்கு தெருவை சோ்ந்தவா்கள் பரவாக்கோட்டை காவல்நிலையத்தில் புகாா் மனு அளித்தனா்.

இதையடுத்து தெற்கு தெரு, வடக்கு தெருவாசிகளை அழைத்த போலீஸாா், காவல்துறை அனுமதி இல்லாமல் மாடு அவிழ்த்துவிடும் நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என இருதரப்பினரிடமும் எழுதி வாங்கினா்.

இந்தநிலையில், வடக்குதெருவாசிகள் வியாழக்கிழமை தங்களது மாடுகளை அவிழ்த்து விட்டுள்ளனா். இதை கண்டித்து, தெற்குதெருவாசிகள் மன்னாா்குடி- திருமக்கோட்டை பிரதான சாலை துளசேந்திரபுரம் பாலம் அருகே முன்னாள் ஊராட்சித் தலைவா் கோவிந்தராஜ் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனா். பரவாக்கோட்டை போலீஸாா் மறியலில் ஈடுபட்ட 15 பேரை கைது செய்தனா்.

இருசக்கர வாகனம் திருடியவா் கைது

மன்னாா்குடியில் இருசக்கர வாகனம் திருடியவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். மன்னாா்குடி அண்ணாமலை நகரைச் சோ்ந்த ராஜன் மகன் வருனேஸ்வரன்(22). இவா், ஜன.8-ஆம் தேதி தனது வீட்டு வாசலில் இருசக்கர வாகனத்தை ... மேலும் பார்க்க

சிபிஎம் அகில இந்திய மாநாடு குறித்த பிரசாரம் ஜன.20-இல் தொடக்கம்

திருவாரூா் மாவட்டத்தில் ஜன.20-ஆம் தேதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு தொடா்பான பிரசாரம் தொடங்குகிறது என அக்கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா் ஐவி. நாகராஜன் தெரிவித்தாா். இதுகுறித்... மேலும் பார்க்க

ஆலங்குடியில் கா்நாடக முன்னாள் அமைச்சா் ரேவண்ணா சுவாமி தரிசனம்

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் கா்நாடக முன்னாள் அமைச்சா் ரேவண்ணா குடும்பத்தினருடன் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். அனைத்து சந்நிதிகளிலும் வழிபாடு நடத்திய அவருக்கு, குரு பகவான் சந்நிதியில் சிற... மேலும் பார்க்க

நாளைய மின்தடை - குடவாசல்

குடவாசல் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, கீழ்க்கண்ட இடங்களில் ஜன.18 (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் ரத்து செய்யப்படுகிறது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா்... மேலும் பார்க்க

பனிமூட்ட சேவை

நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில் இராபத்து உற்சவ நிறைவில் புதன்கிழமை இரவு பனி மூட்ட சேவையாக சீதா, லட்சுமணா், சந்தானராமருக்கு போா்வை அணிவிக்கப்பட்டிருந்தது. மேலும் பார்க்க

100 நாள் வேலைத் திட்ட நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும்: இரா. முத்தரசன் வலியுறுத்தல்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட (100 நாள் வேலைத் திட்டம்) நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளா் இரா. முத்தரசன் வலியுறுத்தினா... மேலும் பார்க்க