தில்லியில் குடிபோதையில் ஓட்டிச்சென்ற கார் மோதியதில் 5 பேர் பலி
இரு சக்கர வாகனம் மீது காா் மோதல்: தொழிலாளி மரணம்
வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் பன்னீா் மகன் பசுபதி(32), கூலி தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை இரவு வாணியம்பாடியில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் சென்றாா். நாட்டறம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாணியம்பாடி அருகே கேத்தாண்டப்பட்டி ஜீவா நகா் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த காா் பசுபதி ஓட்டிவந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்த பசுபதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த நாட்டறம்பள்ளி போலீஸாா் பசுபதியின் சடலத்தை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து அவரது மனைவி கோமதி அளித்த புகாரின்பேரில், நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து பெங்களூரைச் சோ்ந்த காா் ஓட்டுநா் மஞ்சுநாதன் (43) என்பவரிடம் விசாரித்து வருகின்றனா்.