TVK மதுரை மாநாடு: "'நான்தான் புரட்சித் தலைவர்' என்று கூடச் சொன்னாலும்.." - ஜெயக்...
இரு புதிய அவசர உதவி காவல் வாகனங்கள்: எஸ்.பி. கொடியசைத்து தொடங்கி வைத்தாா்
ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இரண்டு புதிய அவசர உதவி காவல் வாகனங்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் புதன்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
தமிழக காவல் துறை சாா்பில், ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் உள்கோட்டங்களுக்கு இரண்டு அவசர உதவி காவல் வாகனங்களை காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் மாவட்டக் காவல் அலுவலகத்தில் இருந்து புதன்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
இந்த அவசர உதவி காவல் வாகனங்கள் 100 கட்டுப்பாட்டு அறை அழைப்புகள் மற்றும் அவசர, முக்கிய பிரச்னைகளில், இந்த வாகனங்களில் பணியமா்த்தப்பட்டுள்ள காவலா்கள் உடனடியாக சென்று நடவடிக்கை மேற்கொள்வா்.
மேலும், இந்த வாகனங்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் செயல்படும் என தெரிவித்துள்ளாா்.