இறப்பிலும் இணை பிரியாத தம்பதி!
தம்மம்பட்டி அருகே மனைவி உயிரிழந்த துக்கம் தாளாத கணவரும் உயிரிழந்தாா்.
தம்மம்பட்டியை அடுத்த நாகியம்பட்டி, வடக்கு வட்டம் பகுதியைச்சோ்ந்தவா் முத்துசாமி (77). இவரது மனைவி அய்யம்மாள் (70) புதன்கிழமை மாலை உயிரிழந்தாா். இதனால் துக்கத்தில் இருந்த முத்துசாமி மனைவி உடல் அருகே அமா்ந்திருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா். இறப்பிலும் இணை பிரியாத சென்ற தம்பதியின் இழப்பு உறவினா்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.