செய்திகள் :

இறுதியாக ஓடிடியில் மாமன்! வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

post image

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மாமன் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதியை ஜி5 ஓடிடி நிறுவனம் அறிவித்துள்ளது.

இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் எழுத்து இயக்கத்தில், சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படமாக வெளியான படம் மாமன்.

இந்தப் படத்தில், சூரி, ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் ஸ்வாசிகா என முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் லட்டுவாக குழந்தை நட்சத்திரம் பிரகீத் சிவன் கலக்கியுள்ளார்.

மே மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம், தற்போது ஜீ5 ஓடிடி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் வெளியாகவுள்ளதாக ஒரு மாதத்துக்கு முன்பே அறிவிக்கப்பட்டது.

ஆனால், ஒரு மாதமாக வெளியீட்டுத் தேதி குறிப்பிடாமல் இருந்ததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்திருந்தனர்.

இந்த நிலையில், வருகின்ற ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக ஜி5 ஓடிடி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Z5 OTT has announced the OTT release date of the movie Maaman.

இதையும் படிக்க : ஆமிர் கான் வீட்டில் 25 ஐபிஎஸ் அதிகாரிகள் சந்திப்பு! மௌனம் கலைந்தது..!

இந்த வார இறுதியில் நிறைவடையும் பிரபல தொடர்!

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பவித்ரா தொடர் இந்த வார இறுதியில் நிறைவடையவுள்ளது.சினிமாவில் யோகி படத்தின் மூலம் நடிப்புப் பயணத்தை தொடங்கிய சினேகன், பவித்ரா தொடரில் சிறப்புத் தோற்றத்தில் நடித... மேலும் பார்க்க

டாம் க்ரூஸ் - ஆனா டி ஆர்மஸ் காதல்? வைரலாகும் புகைப்படங்கள்!

பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்களான டாம் க்ரூஸ் மற்றும் ஆனா டி ஆர்மஸ் இருவரும் காதலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹாலிவுட்டின் நட்சத்திரமான டாம் க்ரூஸ் நடிப்பில் இறுதியாக வெளியான மிஷன் இம்ஃபாசிபி... மேலும் பார்க்க

லீக் 1 தொடருக்குத் திரும்பும் நெய்மர்? பிஎஸ்ஜியின் எதிரி அணியில்!

பிரபல கால்பந்து வீரர் நெய்மர் ஜூனியர் சன்டோஷ் எஃப்சி கிளப்பிலிருந்து விலகி பிரான்ஸின் புகழ்ப்பெற்ற லீக் 1 தொடரில் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரேசிலைச் சேர்ந்த நெய்மர் (33 வயது) சமீப... மேலும் பார்க்க

என்ன, திங்கள்கிழமையா? இதயம் பத்திரம்! மாரடைப்பு வரும் ஆபத்து அதிகமாம்!

மாரடைப்பு என்பது எப்போது வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்கிறது மருத்துவம். அதே வேளையில், மருத்துவர்களோ, திங்கள்கிழமை என்றால் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்கிறார்க... மேலும் பார்க்க

ஓர் இரவும் ஆணவக் கொலை வழக்கும்... ரோந்த் - திரை விமர்சனம்!

ஆணவக் கொலை வழக்கு ஒன்றில் இரவு ரோந்து செல்லும் இரு காவலர்கள் சிக்க வைக்கப்படுகிறார்கள். உண்மையில் என்ன நடந்தது? இதற்கு காரணமானவர்கள் யார்? என்பதற்கான பதிலே ரோந்து திரைப்படத்தின் ஒன்லைன். கேரளத் திரைத்... மேலும் பார்க்க

குயிண்டன் டாரண்டினோ - டேவிட் ஃபிஞ்சர் கூட்டணியில் புதிய படம்!

இயக்குநர் டேவிட் ஃபிஞ்சர் தன் புதிய படத்தின் படப்பிடிப்பைத் துவங்கியுள்ளார். ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர்களான குயிண்டன் டாரண்டினோ மற்றும் டேவிட் ஃபிஞ்சர் இணைந்து புதிய படத்தை உருவாக்கத் திட்டமிட்டிருந... மேலும் பார்க்க