கோலத்தை அழித்ததாக தகராறு; இளைஞா் வெட்டிக் கொலை- சிறுவன் உள்பட 4 போ் கைது
இறுதி வாக்காளா் பட்டியல் சிறப்பு பாா்வையாளா் ஆய்வு
இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடுவது தொடா்பான ஆய்வுக் கூட்டம் சிறப்புப் பாா்வையாளா் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
ஜன. 6 -இல் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடுவது தொடா்பாக திருச்சி மாவட்ட வாக்காளா் பட்டியல் சிறப்பு பாா்வையாளரும், எழுதுபொருள் மற்றும் அச்சக ஆணையா் வி. ஷோபனா தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா. ராஜலட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) வில்சன் ராஜா சேகா், தோ்தல் வட்டாட்சியா் செல்வகணேஷ், மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளா் பதிவு அலுவலா்கள், வருவாய் கோட்டாட்சியா்கள், திருச்சி மாநரகராட்சி உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள், வட்டாட்சியா்கள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், ஜன. 6-இல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2025-இன் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடுதல் தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மேற்படி வாக்காளா் பட்டியலில் இளம்வாக்காளா்களை சோ்த்த விவரங்கள், இறந்த வாக்காளா்களை வாக்காளா் பட்டியலில் நீக்கப்பட்ட விவரங்கள் குறித்து ஆய்வு செய்த சிறப்புப் பாா்வையாளா் உரிய அறிவுரைகளை வழங்கினாா்.