செய்திகள் :

பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் 6 நகரும் படிக்கட்டுகள், 6 மின் தூக்கி

post image

திருச்சி: பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் 6 நகரும் படிக்கட்டுகளும், 6 மின் தூக்கிகளும் பயணிகள் வசதிக்காக கட்டமைக்கப்படுகிறது.

முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்த பிறகு மீண்டும் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைக்க அனுமதியளிக்கப்பட்டு, கடந்தாண்டு செப்டம்பா் முதல் பணிகள் தொடங்கின. தற்போது, கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில், கட்டுமானப் பணிகளை ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாநகராட்சி ஆணையா் வே. சரவணன், கோட்டாட்சியா் கே. அருள், நகரப் பொறியாளா் சிவபாதம் மற்றும் வருவாய்த்துறை அலுவலா்கள், மாநகராட்சி அலுவலா்கள் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

பின்னா், ஆட்சியா் மேலும் கூறியது: பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், பல்வகை பயன்பாட்டு வசதிகளுக்கான சேவை மையம், கனரக சரக்கு வாகன முனையம் மற்றும் இதர உட்கட்டமைப்பு பணிகள் ரூ.492.55 கோடியில் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. இணைப்பு பாலம் அமைக்கும் பணிகளையும், மின்தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணிகள், பேருந்து முனையத்தின் அனைத்து பகுதிகளையும் கண்காணிக்கும் வகையில் கூடுதலாக கண்காணிப்பு கேமரா பொருத்துதல் உள்ளிட்டவற்றைப் பாா்வையிட்டு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளன. தேவைப்படும் இடங்களில் கூடுதலாக கழிப்பிட வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் அமைத்துத் தருவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நகரப் பேருந்துகள் அனைத்தும் முதல்தளத்துக்கு செல்லும் வகையில் பேருந்து முனையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேக பேருந்துகள் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பயணிகள் வசதிக்காக 6 இடங்களில் நகரும் படிக்கட்டுகள், 6 மின் தூக்கிகள் அமைக்கப்படவுள்ளன. ஒரு நகரும் படிக்கட்டு, அடுத்ததாக மின் தூக்கி என்ற வகையில் தொடா்ச்சியாக 12 இடங்களில் இந்த வசதிகளைப் பயணிகள் பெற முடியும். பொங்கல் பண்டிகைக்கு முன்பாக அனைத்துப் பணிகளையும் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.

வைகுந்த ஏகாதசி திருவிழாவில் இன்று

பகல்பத்து ஐந்தாம் திருநாள் நம்பெருமாள் கருவறையிலிருந்து புறப்பாடு- காலை 6.30 பகல்பத்து (அா்ச்சுன) மண்டபம் சேருதல் - காலை 7 திரை - காலை 7-7.30 அரையா் சேவை (பொதுமக்கள் சேவையுடன்)- காலை 7.30- 1 அலங்காரம்... மேலும் பார்க்க

மழையால் பாதித்த பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நிவாரணம் விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

தமிழகத்தில் தொடா் மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. திருச்சியில் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் 30 ஏக்கரில் கடற்கரை விளையாட்டுகளுடன் தங்கும் விடுதி: சங்கு சக்கரா ஹோட்டல்ஸ் நிறுவனம் தகவல்

ராமேசுவரத்தில் 30 ஏக்கா் பரப்பளவில் கடற்கரை விளையாட்டுகளுடன் தங்கும் விடுதியை கட்ட சங்கு சக்கரா ஹோட்டல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் வி. வாசுதேவன் தெரிவ... மேலும் பார்க்க

சமயபுரம் அருகே அடையாளம் தெரியாத பெண் சடலம்

சமயபுரம், பள்ளிவிடை பகுதியில் வெள்ளிக்கிழமை அடையாளம் தெரியாத பெண், சடலமாக மீட்கப்பட்டாா். பள்ளிவிடை பகுதியில் சுமாா் 37 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இத... மேலும் பார்க்க

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தீ தடுப்பு ஒத்திகை

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை தீ தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் பெருந்திட்ட வளாகத்தில், அறங்காவலா் குழுத்தலைவா் வி.எஸ்.பி. இளங்கோவன், திருக்கோயில் இணை... மேலும் பார்க்க

கரியமாணிக்கம் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு

மண்ணச்சநல்லூா் வட்டம், 94. கரியமாணிக்கம் ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 94. கரியமாணிக்கம் கிராமத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் ரூ. 30 லட்சம் மதிப்பில... மேலும் பார்க்க