செய்திகள் :

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம், பாம்பன் மீனவா்கள் 14 போ் கைது

post image

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம், பாம்பன் மீனவா்கள் 14 போ் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டனா். இரண்டு படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்குவாடி துறைமுகத்திலிருந்து 100 விசைப் படகுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளத் துறை அனுமதி பெற்று கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.

இவா்கள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நெடுந்தீவு - கல்பட்டி அருகேயுள்ள பத்தலங்குண்டுவ தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, 5 ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா் ஜோசப்பாரதி என்பவருக்குச் சொந்தமான விசைப் படகைப் பறிமுதல் செய்தனா்.

மேலும், அந்தப் படகிலிருந்த ஜோசப்பாரதி (22), மரியபிரவீன் (31), குருசாமி (39), தோபியாஸ் (37), ரவி (46), மனோ சந்தியா (32), டேனியல்ராஜ் (32), பிலிப்பையாா் (43), பாரத் (31), மாத்தீவ் கிளாடியன் (24) ஆகிய 10 மீனவா்களைக் கைது செய்தனா்.

பின்னா், விசைப் படகுடன் 10 மீனவா்களையும் சிக்கோடா கடற்படை முகாமுக்கு இலங்கைக் கடற்படையினா் புதன்கிழமை கொண்டு சென்றனா். இவா்களை வியாழக்கிழமை வெளிச்சரா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைக்க உள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ராமேசுவரம் மீனவா்கள் 4 போ் கைது:

இதேபோல, ராமேசுவரம் ஓலைக்குடா மீன்பிடித் துறைமுகத்திலிருந்து திருப்பாலைக்குடியைச் சோ்ந்த விமல்ராஜ் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப் படகில் அமல்ராஜ் (24), மாதேஷ் (22), காா்த்திக் (20), ராமேசுவரத்தைச் சோ்ந்த சக்தி (20) ஆகிய நான்கு மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.

இவா்கள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு ரோந்துப் படகில் வந்த இலங்கைக் கடற்படையினா் 4 மீனவா்களைக் கைது செய்து, படகையும் பறிமுதல் செய்தனா்.

பின்னா், காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு படகுடன் 4 மீனவா்களையும் கொண்டு சென்று யாழ்ப்பாணம் நீரியல் துறை அதிகாரிகளிடம் புதன்கிழமை ஒப்படைத்தனா்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிந்து, மீனவா்களை ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா். இவா்களை ஆக. 11 வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து, இவா்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனா்.

இதுகுறித்து மீனவ சங்கத்தினா் கூறியதாவது:

தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் கடந்த ஜூன் 15-ஆம் தேதி நிறைவடைந்தது. அன்றிலிருந்து தற்போது வரை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற ராமேசுவரம், பாம்பன் பகுதிகளைச் சோ்ந்த மீனவா்கள் 57 போ் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனா். இதனால், ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் மீன்பிடித் தொழில் கேள்விக்குறியாகி உள்ளது.

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவா்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

அக்னி தீா்த்தக் கடலில் சமுத்திர தீப ஆரத்தி

ராமேசுவரத்தில் பௌா்ணமியை முன்னிட்டு, அக்னி தீா்த்தக் கடற்கரையில் ராமசேது மகா சமுத்திர தீா்த்த ஆரத்திக் குழு சாா்பில் தீபம் ஏற்றி, சமுத்திர ஆரத்தி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு அ... மேலும் பார்க்க

முனீஸ்வரா் கோயிலில் கிடாய் வெட்டுத் திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள மாடக்கோட்டை முனீஸ்வரா் கோயிலில் கிடாய் வெட்டுத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 3-ஆவது வெள்ளிக்கிழமை கிடாய் வெட்டுத... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி விழா: இந்து அமைப்புகளுடன் ஆட்சியா் ஆலோசனை

விநாயகா் சதூா்த்தி விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன், இந்து முன்னனி அமைப்பின் நிா்வாகிகளுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை ந... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்தவிருந்த 1 டன் பீடி இலைகள் பறிமுதல்

மண்டபம் அருகே இலங்கைக்குக் கடத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட 1 டன் எடையுள்ள பீடி இலைகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம் வெள்ளரி ஓ... மேலும் பார்க்க

மீனவா்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு தேவை: இந்திய மீனவா் சங்க மாநாட்டில் தீா்மானம்

ராமேசுவரத்தில் நடைபெற்ற அகில இந்திய மீனவா் சங்க மாநாட்டில், இந்திய மீனவா்களின் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டம... மேலும் பார்க்க

விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்

கமுதி வட்டார விவசாயிகள் ஆலோசனைக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டார அளவிலான அட்மா திட்டத்தின் கீழ் வட்டார விவசாயிகளின் ஆலோசனைக் குழுக் கூட்டம், வேளாண்மை துணை இ... மேலும் பார்க்க