செய்திகள் :

இலங்கையில் முன்னாள் அதிபரின் உதவியாளர் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு

post image

இலங்கையில் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் உதவியாளர் வாகனம் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் ரணில் விக்ரமசிங்க அதிபராக இருந்தபோது அவருடைய மக்கள் தொடர்பு இயக்குநராக பணியாற்றியவர் துசிதா ஹல்லுவா. இவர் தனது வழக்கறிஞருடன் வாகனத்தில் சனிக்கிழமை இரவு கொழும்பின் புறநகர்ப் பகுதியான நாரஹென்பிடவுக்கு சென்றிருக்கிறார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் வழி மறித்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். தொடர்ந்து ஹல்லுவா மற்றும் அவருடன் வந்த நபர்களை தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இருப்பினும் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

மூன்றாண்டு காலப் போரில் பெரியளவிலான ட்ரோன் தாக்குதல் நடத்திய ரஷியா!

துப்பாக்கிச் சூட்டில் வாகனம் சேதமடைந்தது. மேலும் மர்ம நபர்கள் ஹல்லுவா வசம் இருந்த ரகசிய கோப்பு ஒன்றையும் திருடிச் சென்றனர். இதுகுறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இச்சம்பவம் இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் அதிபர் அநுர குமார திசநாயகவுக்கு எதிராக அவதூறான அறிக்கை விவகாரத்தில் ஹல்லுவாவை சிஐடி விசாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற விருதுகள்: 17 பேர் தேர்வு! 11 ஆண்டுகளுக்குப் பின் தமிழக எம்.பி பெறுகிறார்!

நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக திருவண்ணாமலை தொகுதி திமுக எம்.பி. சி.என்.அண்ணாதுரை உள்ளிட்ட 17 எம்.பி.க்கள் ‘சன்சத் ரத்னா 2025’ விருதுகளுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா். 11 ஆண்டுகளுக்குப் பிற... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் வீசிய 42 வெடிக்காத குண்டுகள்! -பாதுகாப்பாக அழிப்பு

கடந்த ஜம்மு-காஷ்மீா் எல்லையோர கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் வீசிய வெடிக்காத 42 குண்டுகள் ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்பாக செயலிழக்கச் செய்யப்பட்டன. பயங்கரவாதிகளைக் குறிவைத்து இந்தியா நடத்திய ஆ... மேலும் பார்க்க

கா்னல் சோஃபியா குரேஷி குறித்து சா்ச்சை கருத்து: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை!

கா்னல் சோஃபியா குரேஷி குறித்து மத்திய பிரதேச அமைச்சர் விஜய் ஷா சா்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டார்.‘பஹல்காமில் நமது சகோதரிகளின் குங்குமத்தை அழித்தவா்களை, அவா்களின் சகோதரியை வைத்தே பிரதமா் மோடி ஒழித... மேலும் பார்க்க

குடியிருப்புக்கு வெளியே காலணியை வைப்பதற்காக ரூ. 24,000 அபராதம் செலுத்திய நபர்!

பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பு வாசலில் காலணியை வைத்துக்கொள்வதற்காக இளைஞர் ஒருவர் அபராதம் செலுத்தி வருகிறார். ஒரு நாளுக்கு ரூ.100 வீதம் 8 மாதங்களுக்கு ரூ. 24,000 அபராதம் செலுத்தியுள்ளார். தற்போ... மேலும் பார்க்க

கோழிக்கோடு பேருந்து நிலைய கடையில் தீ விபத்து!

கேரள மாநிலம் கோழிக்கோடு பேருந்து நிலைய துணிக் கடையில் இன்று (மே 18) மாலை பயங்கர தீ விபத்து நேரிட்டது. மாலை 5 மணியளவில் நேரிட்ட தீ விபத்தை சுமார் 2 மணிநேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு... மேலும் பார்க்க

அமெரிக்க வாழ் இந்தியர்களின் விசா ரத்தாகும் அபாயம்?

புது தில்லி: இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரகம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்காவில் இந்தியர்களுக்கு நிரந்தர தடை விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. டொனால்ட் டிரம்ப் தலைமைய... மேலும் பார்க்க